ஓசூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் முருகேஷ். இவர், தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் பெற்று வழங்கும் கோப்புகளை அடுத்த நிலைக்கு அனுப்ப, தாமதித்தும், ஆசிரியர்களிடம் லஞ்சம் வாங்கியும் வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் புகார் செய்தனர்.
அதன் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி நடத்திய விசாரணையில், ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், 7 பேர் எழுத்து பூர்வமாக, லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர். ஆசிரியர்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததையடுத்து, உதவியாளர் முருகேஷை, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், லஞ்சம் பெறுவது மட்டும் குற்றமல்ல, லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்ற அடிப்படையில், லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்த, 7 ஆசிரியர்களுக்கும், நேற்று முன்தினம், 17 (பி) ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் வழங்கி, ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது ஆசிரியர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.``` ``` இந்த நோட்டீசிற்கு அடுத்த, 15 நாட்களுக்குள், ஆசிரியர்கள் விளக்கமளிக்க வேண்டும். அவர்கள் மீது, கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு அதிகம். அதனால், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
``` ```
No comments:
Post a Comment