கோடை வெயிலால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்காத வகையில், ஏப்ரல் 4 முதல் ஒருவேளை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ``` ```ஆந்திராவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 40 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்காக 4ம் தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் காலை 7.30 முதல் 11.30 வரை மட்டும் திறக்கப்படும். ஏபரல் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வுகளும், மே 6 முதல் இன்டர்மீடியட் ( பிளஸ் 2 ) தேர்வுகள் நடைபெறுமென ஆந்திர மாநிலக் கல்வித் துறை அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ் தெரிவித்துள்ளார். ஆந்திர கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
``` ```
No comments:
Post a Comment