தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 100 ஆண்டுகள் கடந்து , நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படும் விதமாக , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் , தமிழ் அறிஞர்கள் , தலைவர்கள் , விளையாட்டு வீரர்கள் , பல்துறை சாதனையாளர்கள் , அறிவியல் அறிஞர்கள் கல்வி பயின்ற பள்ளியை கண்டறிந்து , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . மேலும் , அப்பள்ளி நூலகங்களிலுள்ள அரிய நூல்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் குறித்த ஆவணங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் . ஆகவே , அப்பள்ளியின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் மாவட்டத்தில் , அரசு பள்ளிகளில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய பள்ளிக் கட்டடங்களும் உரிய முறையில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் , புராதான கட்டடங்களை ( Heritage building ) சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment