பிலவ வருடம் பங்குனி 10ஆம் தேதி மார்ச் 24, 2022, வியாழக்கிழமை,சப்தமி இரவு 12.10 மணி வரை அதன் பின் அஷ்டமி திதி,கேட்டை மாலை 05.29 மணி வரை அதன் பின் மூலம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் விருச்சிகம் மற்றும் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ``` ``மேஷம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் முடிகிறது ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்க உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரர்களையும் பார்க்கலாம்.மேஷம்சந்திரன் இன்று மாலை வரை எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு மாலை 05.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளை தவிர்க்கவும்.ரிஷபம்இன்று மாலை வரை நீங்கள் எடுக்கும் காரியங்களில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். காரணம் சந்திரன் சஞ்சாரம் மாலை வரை சாதகமாக உள்ளது.``` ``` உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சந்திரன் இன்று மாலைக்கு மேல் எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு மாலை 05.25 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.மிதுனம்சந்திரன் பயணம் சாதகமாக உள்ளது. இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும். திடீரென்று பயணம் செல்ல நேரிடும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். லாபம் உண்டாகும்.கடகம்சந்திரன் பயணம் சாதகமாக உள்ளது என்றாலும் இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படலாம். முயற்சி செய்தால் மட்டுமே எடுத்த காரியத்தில் வெற்றி காண முடியும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.``` ``` மனக்குழப்பம் சற்று குறையும்.சிம்மம்சந்திரன் பயணத்தினால் இன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். பழைய கடன் பிரச்சினை தீரும்.கன்னிசந்திரன் சஞ்சாரத்தினால் இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.துலாம்சந்திரன் இன்று மாலை வரை குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.விருச்சிகம்சந்திரன் சஞ்சாரம் மன நிம்மதியைத் தரும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பணவரவு உண்டாகும்.தனுசுசந்திரன் சஞ்சாரத்தினால் திடீர் செலவுகள் வரும். பணவரவுக்கு ஏற்ப செலவுகள் அதிகரிக்கும். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.``` ```மகரம்சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.கும்பம்சந்திரனின் பயணத்தால் இன்று நீங்கள் எந்த செயலையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.மீனம்சந்திரன் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்வதால் இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலப் பலன் கிட்டும். ``` ```
No comments:
Post a Comment