```
```
பிலவ வருடம் பங்குனி 5ஆம் தேதி மார்ச் 19, 2022, சனிக்கிழமை,பிரதமை பகல் 11.37 மணி வரை அதன் பின் துவிதியை. ஹஸ்தம் இரவு 11.37 மணி வரை அதன் பின் சித்திரை நட்சத்திரம். சந்திரன் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. ```
```மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.மேஷம்இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நலமடையும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.ரிஷபம்இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் உதவியால் பண நெருக்கடி குறைந்து மனநிம்மதி உண்டாகும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.மிதுனம்இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.```
``` எடுக்கும் காரியங்களில் சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் ஓரளவு சாதகமான பலன் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சொந்தங்கள் வருகையால் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.கடகம்இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.சிம்மம்இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும். மனநிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.கன்னிசந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் நிலை உருவாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.துலாம்இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். ```
```வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். மனஉறுதியோடு எதையும் எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் கூடவே செலவுகளும் வந்து நீங்கும்.விருச்சிகம்சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யக் கூடிய சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.தனுசுசந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். மன அமைதி கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் நற்செய்தி கிடைக்கும்.மகரம்சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும்.கும்பம்சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வெளி இடங்களில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.```
``` வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.மீனம்சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.```
```
1-5 std guide | CLICK HERE |
9 std guide | CLICK HERE |
10 std guide | CLICK HERE |
11 std guide | CLICK HERE |
12 std guide | CLICK HERE |
Friday, March 18, 2022
New
Today's Rasi Palan :இன்றைய ராசி பலன் சனிக்கிழமை மார்ச் 19, 2022
About Kalviupdate
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Astro
Tags
Astro
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment