சான்றிதழ் பதிவேற்றம் கட்டாயம் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, March 29, 2022

சான்றிதழ் பதிவேற்றம் கட்டாயம் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு.

``` ```

 அரசு துறை பதவிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி.,அறிவித்துள்ளது.


இது குறித்து அரசுபணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டசெய்திக் குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி., பணி நியமன நடவடிக்கையில் குரூப் -- 1, 2 மற்றும் 4 ஆகிய பிரிவுகளின் பதவிகளை தவிர மற்ற அனைத்து வகை பதவிகளுக்கும் 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.``` ```விண்ணப்பத்தில் உள்ள தகவல்களுக்கு ஆதாரமான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்ற வேண்டும்.


எனவே தேர்வர்கள் தங்களின் அனைத்து வகை சான்றிதழ்களையும் முன்னரே 'ஸ்கேன்' செய்து, தயார் நிலையில் வைக்க வேண்டும். ஏதாவது சான்றிதழ் தவறாக பதிவேற்றி இருந்தால் விடுபட்டிருந்தால்தேர்வு தேதிக்கு 12 நாட்களுக்கு முன் மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்ற அனுமதி அளிக்கப்படும்.


ஏற்கனவே பதிவேற்றிய சான்றிதழ் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வுக்குப் பின் நடத்தப்படும் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால் helpdesk@tnpscexams.in மற்றும் grievance.tnpsc@tn.gov.in என்ற இ- - மெயில் முகவரிக்கு மனுஅனுப்பலாம்.


அனைத்து வேலை நாட்களிலும் 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் காலை 10:00 மணி முதல், மாலை 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

``` ```

No comments:

Post a Comment