நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வரும் 4ம் தேதி நடக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், வேலைதேடுவோர் பங்கேற்கலாம் என்று நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும், 'தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்', நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வெள்ளிக்கிழமை தோறும் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும், மூன்றாவது வெள்ளிக்கிழமை, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
மேலும், இந்த வாரத்துக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும், 4ம் தேதி, காலை, 10.30 மணிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. தனியார் துறை நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளைக் கொண்டு, நேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.
முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள், ப்ளஸ் 2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பயிற்சி மற்றும் கணினியில் (ஜாவா, டேலி) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதி உள்ளோரும் இதில் பங்கேற்று பயன்பெறலாம்.
No comments:
Post a Comment