இ-பைக் அவ்வப்போது தீப்பற்றி எரிவது ஏன்? எப்படி தடுக்கலாம்? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, March 26, 2022

இ-பைக் அவ்வப்போது தீப்பற்றி எரிவது ஏன்? எப்படி தடுக்கலாம்?

``` ```

 


இ ஸ்கூட்டர்.இ-பைக் எனப்படும் மின்சார வாகனங்கள் சமீப காலமாக தீப்பற்றி எரிந்ததாக வெளிவரும் செய்திகள், அதன் பயன்பாட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்துகின்றன.பசுமை உலகுக்கு மக்களை மாற்ற கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான பேட்டரி வாகனங்களை வாங்க இந்திய அரசு பல்வேறு மானிய திட்டங்களையும் வரிச்சலுகைகளையும் அறிவித்துள்ளது.இந்த நிலையில், அரிதாக நடக்கும் பேட்டரி வாகன தீ விபத்து சம்பவங்கள் எப்படி நடக்கின்றன என்பதை பார்க்கலாம்.``` ``` வழக்கமாக இ பைக்குகளின் ஃப்ரேமில் பெரிய லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதை கவனமாகக் கையாளாவிட்டால் தீ ஆபத்தை உண்டாக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். லித்தியம் பேட்டரிகள் இ-பைக்குகளுக்கு ஏற்றதாக இருக்கும் வகையில் பல நன்மைகளைக் கொண்டுள்ளன.அவற்றை நூற்றுக்கணக்கான முறை சார்ஜ் செய்து, டிஸ்சார்ஜ் செய்யலாம். ஒப்பீட்டளவிலும் இலகு ரகமாகவும் அவை உள்ளன. மேலும், பல வகை பேட்டரிகளை விட குறைந்த அளவிலான நச்சு உலோகத்தை லித்தியம் பேட்டரி கொண்டிருக்கிறது. ஆனாலும், அவை எளிதில் தீப்பிடிக்கும் தன்மை வாய்ந்தவை என்ற கூற்றையும் நாம் ஒதுக்கி விட முடியாது. இ-பைக்குகள் தீப்பிடிப்பது ஏன்? இ-பைக்குகளில் லித்தியம் பேட்டரிகள் இரண்டு எலக்ட்ரிக் டெர்மினல்களைக் கொண்டிருக்கின்றன. இடையில் ஒரு எலக்ட்ரோலைட் திரவம் உள்ளது. பேட்டரி சார்ஜ் செய்யப்படும்போதும் டிஸ்சார்ஜ் செய்யப்படும்போதும், சார்ஜ் செய்யப்பட்ட அயனிகள் ஒரு மின் முனையிலிருந்து மற்றொன்றுக்கு நகரும்.இந்த எலக்ட்ரோலைட் திரவம் எரியக்கூடிய தன்மை வாய்ந்தது. இது பொதுவாக நடக்ககூடியது அல்ல. ஆனால் பேட்டரி சேதமடைந்தாலோ அதிக வெப்பமடைந்தாலோ, இந்த திரவம் எரிய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.மேலும், பேட்டரி செல் கூடுதலாக வெப்பம் அடைந்தாலும் அருகில் உள்ள (தெர்மல் ரன் அவே எனப்படும் செயல்முறை) அதன் பாதைக்கும் அந்த வெப்பம் பின்தொடர்கிறது. அதன் அழுத்தம் விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாகும்போது பேட்டரி வெடிப்பு ஏற்பட்டு தீ ஏற்படுகிறது. இதுபோன்ற நிலைமையை கருத்தில் கொண்டு, அமெரிக்க நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் ஹோவர்போர்டுகளுக்கான பாதுகாப்பு தரத்தை துரிதமாக அறிமுகப்படுத்திச் செயல்படுத்தியது.``` ``` ஆனால், இப்போதும் கூட விமானங்களில் இந்த வகை எலக்ட்ரோலைட் திரவம் அல்லது பேட்டரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இ-பைக்குகள் நீண்ட காலமாகமே புழக்கத்தில் உள்ளன. இதுபோலவே, சமீப ஆண்டுகளாக இ-கார்களும் கார் சந்தையில் பிரபலமாகி வருகின்றன. டெஸ்லா போன்ற சில நிறுவனங்கள் இ-பஸ்களை கூட தயாரித்துள்ளன.ஆனால் தீ ஏற்படும் பேட்டரி வாகனங்கள் பெரும்பாலும் மோசமாக கட்டமைக்கப்பட்ட தயாரிப்பாலேயே நடப்பதாக அமெரிக்க தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி அறக்கட்டளை விளக்குகிறது. எப்படி தடுப்பது? சரி இனி இ-பைக்குகளில் தீ ஏற்பட்டால் அதை எப்படி தடுக்கலாம் என பார்ப்போம். தகுந்த பாதுகாப்பு தரங்களுக்கு இணங்கும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தே இ-பைக்கை வாங்க வேண்டும். அப்படி வாங்கிய இ-பைக்குகளை சரியாக பராமரிப்பதுடன், தீ விபத்துகளைத் தவிர்க்கவும் நீங்கள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.என்ற இ-பைக் நிறுவனர் ரிச்சர்ட் தோர்ப் இந்த விஷயத்தில் சில யோசனைகளை தெரிவிக்கிறார். பேட்டரி வாகனங்களை வாங்கும் முன்பு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வாடிக்கையாளர் கையேட்டை படித்து, முன்னெச்சரிக்கை அறிவுரைகளை புரிந்து கொள்ள வேண்டும். பேட்டரியுடன் பொருந்தக்கூடிய பிராண்டின் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பவர் பேட்ச் வயர்களை () பயன்படுத்தக் கூடாது. சார்ஜரை நேரடியாக சுவர் வழி மின்சார மெயின்ஸ் விநியோகத்தில் மட்டும் சொருக வேண்டும். பேட்டரி பைக்கை சார்ஜ் செய்யும் பகுதியில் ஸ்மோக் டிடெக்டர் இருப்பதையும், அதன் எச்சரிக்கை ஒலி நீங்கள் கேட்கக்கூடிய இடத்தில் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, கேரேஜ் அல்லது கொட்டகையில் உங்கள் பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்தால்,``` ``` ஸ்மோக் டிடெக்டர் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். அந்த எச்சரிக்கை கருவிகள் உங்கள் வீட்டிலிருந்து கூட கேட்கும் வகையில் இருந்தால் நல்லது. உங்கள் பேட்டரி அல்லது இ-பைக் வெள்ளத்தில் சிக்கியிருந்தால், அது நிரந்தரமாக சேதமடைந்ததாகக் கருதுங்கள். அதை சார்ஜ் செய்ய வேண்டாம். அதை பொறுப்புடன் மறுசுழற்சி செய்யுங்கள். இ-பைக்கின் பேட்டரியை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மறுசுழற்சி போல, கட்டாயமாக மாற்ற பரிசீலிக்கவும். இ-பைக் தொழில்நுட்பம் ஒவ்வோர் ஆண்டும் மாறுகிறது. அதற்கு உகந்தவாறு உங்களுடைய பேட்டரி தயாரிப்பு உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும். இறுதியாக, பழைய லித்தியம்-அயன் பேட்டரிகளை உங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டாம். அவை இ-பைக் பேட்டரிகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட அந்த பேட்டரிகளை மறுசுழற்சி செய்து மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது அகற்றி விடுங்கள் என்பது நிபுணர்களின் அறிவுரை.இ ஸ்கூட்டர்.லித்தியம்-அயனில் தீ ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை சில பேட்டரி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அது இ-பைக் உரிமையாளர்களுக்கும் பொருந்தும். வெளிச்சந்தையில் விற்கப்படும் மலிவு விலை பேட்டரி அல்லது இரண்டாம் பயன்பாட்டு பேட்டரிகளை முறையான உத்தரவாதமின்றி பயன்படுத்த வேண்டாம். ஒரே இரவில் மின் பைக்குகளை அதன் பேட்டரி சார்ஜ் அளவை விட கூடுதல் நேரத்துக்கு சார்ஜ் செய்யாதீர்கள். ஒரு பேட்டரி அதிகம் சூடாக இருந்தாலோ குளுமையாக இருந்தாலோ கூட அதன் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நேரடி சூரிய ஒளிக்கு கீழ் பேட்டரிகளையோ பேட்டரி வாகனங்களை நிறுத்துவது பரிந்துரைக்கப்படவில்லை. குழந்தைகள் நடமாடும் அறையில் மின்-பைக்கை (அல்லது அதுபோன்ற சாதனத்தை) நிறுத்தாதீர்கள். தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? உங்கள் இ-பைக்கின் பேட்டரியில் கவனம் செலுத்துங்கள். அதுதான் தீ ஏற்படுவதற்கான மூலமாகும். தீ விபத்து ஏற்படும் முன் நீங்கள் ஆபத்தின் அறிகுறிகளைக் கண்டறியலாம். ஒரு விசித்திரமான வாசனை, வடிவத்தில் மாற்றம், கசிவு, ஒற்றைப்படை சத்தம் அல்லது அது மிகவும் சூடாக உணர்தல் போன்றவை பேட்டரியின் பலவீனமான நிலையை உணர்த்தும் சமிக்ஞைகள். தீ ஏற்பட்டால், ``` ```அதை நீங்களே சமாளிக்க முயற்சிக்காதீர்கள்; லித்தியம் பேட்டரி தீ குறிப்பாக ஆபத்தானது. ஏனெனில் பேட்டரி உறை அதிக வெப்பநிலையில் வெடித்து, குப்பைகள் பறக்கும் அபாயத்தில் இருக்கும். அதற்கு பதிலாக, உடனடியாக அந்த பகுதியை காலி செய்து விட்டு அவசர சேவையை அழைக்கவும்

``` ```

No comments:

Post a Comment