ஆதாருடன் பான் கார்டை இணைக்க நாளை கடைசிநாளாகும். இதை மேற்கொள்ளாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்ணை செயல்படாத எண்ணாக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பலர் ஆதார், பான் எண்ணை இணைத்தனர். ``` ```இதற்கிடையே இகொரோனா பரவலால் ஆதார், பான் இணைப்பதற்கான காலக்கெடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த காலக்கெடு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளையுடன் முடிவுக்கு வருகிறது.நாளை கடைசிஅதன்படி ஆதார்-பான் கார்டு இணைக்க நாளை கடைசிநாளாகும். இதனால் பொதுமக்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை நாளைக்குள் இணைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ரூ.1000 அபராத தொகையாக வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ரூ.1000 அபராதம்இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ``` ```அதில், ‛‛குறிப்பிட்ட கால கெடுவுக்குள் ஆதார், பான் கார்டு எண்களை இணைக்க வேண்டும். தவறினால் வருமான வரி சட்டத்தின் கீழ் அதற்கான பின்விளைவுகளை கண்டிப்பாக எதிர்கொள்ள நேரிடும். 2021 ஏப்ரல் 1 முதல் ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயமாகும். அதன்பின்னர் முதல் மூன்று மாதத்திற்குள் பான் எண்ணை இணைக்காவிட்டால்``` ``` ரூ.500ம், அதன்பிறகு அபராத தொகை ரூ.1000 ஆக உயர்த்தப்படும்‛‛ என கூறியுள்ளது.இணைப்பது எப்படிவருமான வரித் துறையின் ://.../ என்ற வெப்சைட்டில் சென்று சுலபமாக இவை இரண்டையும் இணைத்துவிடலாம். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் இதற்கு அவசியமாகும். மேலும்மூலமாகவும் நீங்கள் இணைக்கலாம். பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்குஎன டைப் செய்துஅனுப்புவதன் மூலம் இவை இரண்டையும் இணைக்கலாம். இதுதவிர சேவை மையங்கள் சென்றும் இரண்டையும் இணைத்து கொள்ளலாம்.பான் கார்டு எதற்குபான் கார்டு என்பது தனிமனிதனின் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் நிதி மோசடிகளைத் தடுக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய ஆவணமாகும். இதை பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனை, நகை வாங்கும்போது பான் கார்டு விபரங்கள் வழங்கப்படுவது அவசியமாக உள்ளது. இதுதவிர ஆதார், ரேஷன் கார்டு போன்று முகவரி அடையாள அட்டையாகவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.:,``` ```
No comments:
Post a Comment