சரவெடி உத்தரவு! தனியார் பள்ளிகளுக்கு கிடுக்குப்பிடி..தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆர்டர்! என்ன தெரியுமா? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, March 23, 2022

சரவெடி உத்தரவு! தனியார் பள்ளிகளுக்கு கிடுக்குப்பிடி..தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆர்டர்! என்ன தெரியுமா?

``` ```


 தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்க கூடாது என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில் மீண்டும் பள்ளிகள் திறந்துள்ளன.``` ``` கேஜி பள்ளி உள்ளிட்ட சிறார்களுக்கான பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடைசி டேர்ம் கட்டணம் கட்ட வேண்டும் என்று மாணவ, மாணவியருக்கு தனியார் பள்ளிகள் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால் கொரோனா காலம் என்பதால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வருகின்றன.  .பள்ளி கட்டணம்இதனால் மாணவ, மாணவியர் பலர் சரியாக கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவியர் வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. பீஸ் கட்டும் வரை வகுப்பிற்கு வர கூடாது என்று பல பள்ளிகளில் மாணவ , மாணவியர் வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.``` ``` இந்த நிலையில்தான் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்க கூடாது என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.என்ன உத்தரவுஇது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர் கருப்பசாமி அனுப்பி உள்ளார். அதில், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவியர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை பள்ளி நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும். கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்க கூடாது.புகார் நடவடிக்கைஇவர்களை தண்டிப்பது போன்ற புகார்கள் எங்களிடம் வந்தால் அதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.``` ``` இது போன்ற புகார்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பாக தனியார் பள்ளிகள் எங்களிடம் உறுதி மொழி எடுக்க வேண்டும். அதேபோல் பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெற்றோர்களை அவமதிக்க கூடாது. அவர்களுக்கு கடுமையான நெருக்கடிகளை வழங்க கூடாது.தரக்குறைவுஅவர்களிடம் எந்த வகையிலும் தரக்குறைவாக பேச கூடாது. இது பற்றி முறையாக உறுதி மொழி எடுக்க வேண்டும். இது தொடர்பாக உறுதி மொழி எடுத்து, அந்த சான்றிதழை உடனே பள்ளிக்கல்வித்துறைகு தனியார் பள்ளிகள் வழங்க வேண்டும். ஆனால் அப்படி சான்றிதழ் அளித்தும் கூட தொடர்ந்து பள்ளி கட்டணம் அளிக்காத மாணவர்களை வெளியே நிற்க வைத்தாலோ, அவர்களை தண்டித்தாலோ, அப்பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ``` ```அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment