அரசு பணிகளில் சேர்பவர்களை, பொது தகுதித் தேர்வு வாயிலாக தேர்வு செய்வதற்கான, 'ஆன்லைன்' தேர்வு பாடத்திட்டங்களை உருவாக்க, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது' என பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து வாயிலாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
தற்போது அரசு பணிகளுக்கு தகுதியுள்ளோரை தேர்வு செய்ய,``` ``` அரசு பணியாளர் கமிஷன், ரயில்வே தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் அமைப்பு உள்ளிட்டவை வாயிலாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அரசு பணிகளுக்கு தகுதியுள்ளோரை தேர்வு செய்ய, ஆன்லைன் வாயிலான பொது தகுதித் தேர்வு நடத்தப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது.
இதன்படி, தகுதித் தேர்வு நடத்துவதற்கான பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோரே, அரசு பணியாளர் கமிஷன் உள்ளிட்டவை நடத்தும் தேர்வில் பங்கேற்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
``` ```
No comments:
Post a Comment