மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியர்கள் புதிய பள்ளியின் பள்ளி SMC passbook ல் பழைய HM ன் பெயரை நீக்கம் செய்து உங்கள் பெயரை சேர்க்க வேண்டும் ..




இதற்கு செய்ய வேண்டிய வேலைகள்
👇👇👇👇👇
முதலில் SMC தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்....

அதாவது இப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த திரு....... அவர்கள் மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு சென்று விட்டதால் SMC நடத்துநர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்தும்.... மேலும் இப்பள்ளிக்கு புதியதாக தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ள திரு...அவர்களை SMC நடத்துநராக நியமனம் செய்து ஒப்புதல் வழங்குவதுடன் SMC பள்ளி வங்கி கணக்கில் பெயர் மாற்றம் செய்து கொள்ளவும் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....

என எழுத வேண்டும்...

வங்கிக்கு செல்லும் போது  கொண்டு செல்ல வேண்டியவை
👇👇👇👇👇
1. கவரிங் லெட்டர்

2. SMC தீர்மானம் ஜெராக்ஸ் 1

3.பழைய தலைமை ஆசிரியர் transfer DEO/BEO ORDER ஜெராக்ஸ் 1

4.புதிய தலைமை ஆசிரியர் transfer DEO /BEO ORDER ஜெராக்ஸ் 1

5.புதிய தலைமை ஆசிரியரின் ஆதார் அட்டை ஜெராக்ஸ் 1

6.புதிய தலைமை ஆசிரியரின் passport size photo 2.

7.பள்ளி SMC passbook..

8.SMC seal.தேவைப்பட்டால்


இதை எடுத்து கொண்டு புதிய தலைமை ஆசிரியர் நேரடியாக வங்கிக்கு சென்று பெயர் மாற்றம் செய்து கொள்ளுங்கள்...

இந்த வேலையை விரைவில் செய்து முடித்தால் தான் .... மீதியுள்ள மானியங்களை உங்களால் செலவினங்கள் மேற்கொள்ள முடியும்...