மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, March 13, 2022

மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

 


இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து விரைவில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பழைய ஓய்வூதிய திட்டம்:


இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த வருடம் அகவிலைப்படி 2 கட்டங்களாக உயர்த்தப்பட்டு 31% ஆக வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியது. அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி மேலும் 3% அகவிலைப்படி உயர்வு, அடிப்படை சம்பளம் உயர்வு,``` ``` வீட்டு வாடகை படி உயர்வு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் ஊழியர்கள், மீண்டும் பழைய ஓய்வூதியத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


மத்திய மாநில அரசுகள் தனது ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இந்த திட்டம் அரசு ஊழியர்களுக்கு பலன்களை அளிக்கவில்லை என்று கருதினர். அதனால் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் முதல் கட்டமாக ராஜஸ்தான் மாநில அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.``` ``` அதன் தொடர்ச்சியாக சத்தீஸ்கரிலும் அண்மையில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போல மற்ற மாநிலங்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசை தொடர்ந்து தற்போது மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி மத்திய சட்ட அமைச்சகத்தில் அரசு ஆலோசனை கேட்டு வருகிறது. அதிவிரைவாக பழைய பென்சன் திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய பென்ஷன் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

No comments:

Post a Comment