பெற்றோர்களே கவனம்.. இனி பள்ளிகளுக்கு “நோ டூ வீலர்”.. அதிரடி உத்தரவிட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, March 21, 2022

பெற்றோர்களே கவனம்.. இனி பள்ளிகளுக்கு “நோ டூ வீலர்”.. அதிரடி உத்தரவிட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை

``` ```

 


தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனத்தில் வர தடை என தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனத்தையும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இயக்க அனுமதி இல்லை என்பது தெரிந்ததே.18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே லைசென்ஸ்்`` ```` வழங்கப்படும் என்றும் லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டுமே இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் இயக்க உரிமையுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .


 பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்

இந்த நிலையில் பல பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வருவதாக தகவல் வந்ததையடுத்து இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு புகார்கள் வந்தது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன்னர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர அனுமதிக்கக் கூடாது என்றும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோர்கள் அனுமதி தரக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.2 சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லைதமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர அனுமதிக்கக் கூடாது என்றும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோர்கள் அனுமதி தரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல் மற்றொரு அறிவிப்பில், பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புு ``` ``` மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி பீரியட் தொடங்கப்பட அனுமதி அளித்து பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.உடற்கல்வி வகுப்புகள்கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்ட காலத்திலும் உடற்கல்வி வகுப்புகள் என்று அழைக்கப்படும் பி.டி. பீரியடுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை இந்த நிலையில் மூன்றாவது அலைக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்டு சில மாதங்கள் ஆன பின்னர் தற்போதுதான் உடற்கல்வி பீரியடுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் மகிழ்ச்சிஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிடி பீரியடில் மாணவர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆனால் அதே நேரத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் அவர்களுக்கு மட்டும் உடற்கல்வி பாடத்திட்டம் பீரியடில் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

``` ```

No comments:

Post a Comment