நீட் தேர்வில் இருந்து.. விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, March 31, 2022

நீட் தேர்வில் இருந்து.. விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம்! அமைச்சர் அன்பில் மகேஷ்

 ```

```

 


இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களும் நீட் நுழைவுத் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது.`````` இந்த ஆண்டு வரும் ஜூலை 17இல் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு தொடர்பான கோரிக்கை தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்,நீட் விலக்குதமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையே தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த செப். மாதம் தமிழ்நாடு சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, இந்த நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதையடுத்து இந்தத் தீர்மானத்தைத் தமிழக அரசு கடந்த மாதம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்காமல் உள்ளார்,``````நீட் தேர்வுஇந்தச் சூழலில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர வரும் ஜூலை 17இல் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் ஏப்ரல் 2 முதல் மே 7ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.அன்பில் மகேஷ்இந்தச் சூழலில் நீட் விலக்கு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஓய மாட்டோம்அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "நீட் தேர்வுக்குத் தயாராகும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், நீட் தேர்வில் இருந்து விலக்கும் தேவை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம்" என்று தெரிவித்தார். நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டிலாவது நீட் விலக்கு கிடைக்குமா என்பதே மாணவர்களின் கேள்வியாக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.:

``````

No comments:

Post a Comment