வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, March 3, 2022

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது!



வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெற்றது... வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது!





 தெற்கு வங்ககடலின் மத்திய கிழக்கு மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த ``` ```காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருந்தது. அதன் படி, இன்று காலை வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வட ``` ```தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து 760 கீ.மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 950 கீ.மீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் அது இலங்கை கடற்பகுதியை அடுத்த 24 மணி நேரத்தில் வந்தடையும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. தொடர்ந்து காற்றழுத்தம் தமிழ்நாடு கடல் பகுதிக்கு அருகாமையில் வரக்கூடும் என்பதால் தமிழ்நாட்டில் வரும் 4ந் தேதி அதிகனமழை பெய்ய என்று கூறி சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment