தமிழ் மற்றும் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய நிதி ஒதுக்குவதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட் உரையில் தமிழ் மொழி மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சி பணிகளுக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியானது.``` ```தமிழ் ஒதுக்கீடுநாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 10 சதவிகிதம் உள்ளது. இந்த பட்ஜெட்டில், தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கொற்கையில் 5 கோடி ரூபாயில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும். புதிய நூலகங்கள் அமைக்க 125 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.இலக்கிய திருவிழாஇலக்கிய திருவிழா நடத்த 5.6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அரசு சாரா பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படும். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும்.தமிழ் மொழிதமிழ் மொழிக்கும் பிற சர்வதேச மொழிக்கும் இடையில் உள்ள தொடர்பை கண்டறிய 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் தமிழ் மற்றும் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும்.``` ``` எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று தமிழ் மொழியைப் போற்றி, அதனை உலகெங்கும் பரவச் செய்வதே இந்த அரசின் தலையாய குறிக்கோளாகும். தமிழ்மொழியின்தொன்மையையும்செம்மையையும் நிலைநாட்டிட வேண்டும்.பிற மொழிஇதற்காக பிற உலக மொழிகளுடன் தமிழின் மொழியியல் உறவு குறித்து அறிவாது அவசியமாகும். மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில்,தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக,இந்த ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும்.``` ```
No comments:
Post a Comment