ஆசிரியைக்கு கத்தி வெட்டு : மாணவன் வெறிச்செயல் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, March 26, 2022

ஆசிரியைக்கு கத்தி வெட்டு : மாணவன் வெறிச்செயல்

``` ```


 கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரேகா (42). இவர் காட்டுக்கூடலூர் எடப்பாளையம் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார்.

ஆசிரியை ரேகாவின் கணவர் சரவணன் அதே பகுதியில் பாத்திர கடை ஒன்றை நடத்தி வருகிறார்.``` ``` இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
ரேகா வழக்கம் போல் இன்று காலை பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு மதியம் அவசர வேலையாக வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அவர் உணவு அருந்தி முடித்து விட்டு வெளியே வந்த போது பள்ளி சீருடையில் இருந்த மாணவன் ஒருவன் தான் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் அவரை தலையில் வெட்டியுள்ளார். அதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து சம்பவம் குறித்து விருத்தாசலம்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆசிரியர் ரேகாவை மீட்டு விருத்தாசலம் ``` ```அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கத்தியால் வெட்டிய மர்மநபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக ஆசிரியர் ரேகா கூறுகையில்,
பள்ளி சீருடை அணிந்திருந்த அவருக்கு 18 முதல் 20 வயது இருக்கும். . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
``` ```

No comments:

Post a Comment