தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு: வெளியானது அரசாணை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, March 2, 2022

தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு: வெளியானது அரசாணை

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் 2022-2023 கல்வியாண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் தேசிய அளவில் சிறந்த முறையில் சட்டசக்கல்வி வழங்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து 2012ல் திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.``` ```இந்த பல்கலைக்கழகத்தில் 2013-2014ம் ஆண்டு முதல் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.செக்! ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள்.. தமிழ்நாடு அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவுநுழைவு தேர்வில் சேர்க்கைஇந்த தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையானது பொது சட்ட படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ()மூலம் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள மொத்த இடங்களில் 45 சதவீதம் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும், 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு மூலமாகவும் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள 5 சதவீத இடங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் படிப்பை மேற்கொள்ளலாம்.இடஒதுக்கீடு எப்படிஇதில் தமிழகத்தை வசிப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கான இடங்கள் தமிழ்நாடு அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி பூர்த்தி செய்யப்படுகிறது. ``` ```50 சதவீத அகில இந்திய இடஒதுக்கீட்டில் 15 சதவீத இடங்கள் பட்டியல் பிரிவினருக்கும், 7.5 சதவீத இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 77.5 சதவீத இடங்கள் பொதுவான( ) முறையிலும் பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கென தனியே இடஒதுக்கீடு ஏதும் இதுவரை வழங்கப்படவில்லை.மாற்றம்இதனால் விரிவான பரிசீலனைக்கு பின் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத இடங்கள் தமிழ்நாட்டினை வசிப்பிடமாகக் கொண்ட மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு முறையில் பின்பற்றப்படும். இதன்மூலம் மாநில அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையான 69 சதவீதத்தை (பொது 31 சதவீதம், பழங்குடியினர் ஒரு சதவீதம், ``` ```பட்டியலினத்தவர் 18 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50 சதவீதம்) போன்றே பின்பற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்து ஆணை வெளியிட்டுள்ளது.வரவேற்புதமிழக அரசின் இந்த முடிவு மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதோடு, சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என அரசு நம்புகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை இடஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment