6 முதல் 9 வரை மாணவர்களுக்கு தேர்வு எப்போது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முக்கிய அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, March 8, 2022

6 முதல் 9 வரை மாணவர்களுக்கு தேர்வு எப்போது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முக்கிய அறிவிப்பு

 


தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 9 வகுப்புகள் வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தின் இறுதியில் தேர்வுகள் நடைபெறும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது.தமிழகத்திலும் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பொதுத் தேர்வு உள்ளிட்ட பள்ளித் தேர்வுகள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது.ஆன்லைன் வகுப்புகள்பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்ற நிலையில் மற்ற வகுப்புகளுக்கும்``` ``` அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. கடந்த வருடம் முழுவதும் நேரடி வகுப்புகள் இல்லாமல் அனைத்துப் பள்ளிகளிலும் பெரும்பாலாக ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடைபெற்றன. தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள்களிலும் ஆன்லைன் முறையிலேயே தேர்வுகளும் நடைபெற்றது.பள்ளிகள் திறப்புஇந்த ஆண்டு கொரோனாவின் 3வது அலை தொடங்கிய நிலையில் மீண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஆண்டைப் போலவே ஆன்லைன் முறையில் வகுப்புகளும், தேர்வுகளும் நடைபெற்றது. பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.நேரடி தேர்வுகள்தற்போது தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் எதிர்பார்க்கப்பட்டது. ``` `````` ```ஆனால்ஆனால் இதுகுறித்து அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு எப்போது நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.மே மாதம் தேர்வுஇதுகுறித்து பேசிய அவர் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் வரும் மே மாதத்தில் இறுதி தேர்வு நடைபெறும் எனவும், ஆன்லைன் அல்லாமல் நேரடியாகவே மே மாதத்தில் இறுதி தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

1 comment:

  1. How to login into the casino in 2021
    Here is how to do this: 1xbet app Step 1. Go https://vannienailor4166blog.blogspot.com/ to the bsjeon website. · Click on the “Login” link on 토토 the right-hand side. · Click on the “Login” button to enter a live chat number. herzamanindir.com/ · Enter the

    ReplyDelete