உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.``` ```இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கி 2 ஆண்டுகள் தாண்டிவிட்டது. இருப்பினும், இப்போது வரை கொரோனா வைரசை எந்த நாடும் முழுமையாக அழிக்கவில்லை.தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பூசி மட்டுமே வைரஸ் பாதிப்பைத் தடுக்க ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன..தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த வேக்சின் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகவே ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வாரம் தமிழ்நாட்டில் 25ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இது தொடர்பாகச் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.வேக்சின் போடப்பட்டுள்ளதுஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் 25ஆவது மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 5.53 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 5.32 கோடி பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 4 கோடிக்கும் அதிகமானோருக்கு 2ஆவது டோஸ் கொரோனா வேக்சின் போடப்பட்டு உள்ளது. அதாவது 92% பேருக்குக் குறைந்தது 2 டோஸ் வேக்சினும், 80% பேருக்கு 2 டோஸ் வேக்சினும் போடப்பட்டுள்ளது.சிறார்கள் மத்தியில் வேக்சின்மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து 12- 14 வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் 12- 14 வயதுடையவர்களுக்கு இதுவரை 4.29 லட்சம் பேருக்கு வேக்சின் செலுத்தி உள்ளோம். மாநிலத்தில் இதுவரை 1.34 கோடி பேர் 2ஆவது டோஸை செலுத்தாமல் உள்ளனர். கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக விலகிவிடவில்லை. கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.4ஆம் அலைஉலக நாடுகளை பார்த்தால் நமக்குத் தெரியும். பல நாடுகளில் இப்போது வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ``` ```கொரோனா வழிகாட்டுதல்களை நாம் முறையாகப் பின்பற்றவில்லை என்றால் மீண்டும் 4ஆம் அலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாவிட்டால் மற்ற நாடுகளைப் போல் நாமும் கொரோனா தொற்றால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகும்.வீடுகளுக்கே சென்ற வேக்சின்ஒரு டோஸ் வேக்சின் போட்டுக் கொண்டு 2ஆம் டோஸ் வேக்சின் போடாமல் இருப்போரின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் அவர்கள் வீடுகளுக்கே சென்ற கொரோனா வேக்சின் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாகத் தமிழ்நாட்டில் பலரும் மாஸ்க் அணிய மறந்து வருகின்றனர். இதுவும் 4ஆம் அலை பரவு வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே அனைவரும் விரைவில் வேக்சின் செலுத்த வேண்டும், சீக்கிரமாக வேக்சின் போட்டுக் கொள்ள வேண்டும்" என்றார்``` ```
No comments:
Post a Comment