கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவிகளின் வருகை பதிவேட்டை மாற்றி தேர்வெழுத அனுமதி மறுத்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடியை சென்னை உயர்நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது. சென்னை குன்றத்தூரில் மாதா பல் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. ``` ```கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு படித்து வந்த மாணவிகளிடம் கல்விக் கட்டணம் அல்லாமல் கூடுதலாக கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் வசூலித்ததாக கூறப்படுகிறது பல மாணவிகள் கூடுதல் கட்டணம் செலுத்திய நிலையில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் படித்து வந்த ராஜ ராஜேஷ்வரி மற்றும் ரம்ய பிரியா ஆகிய 2 மாணவிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் வழக்கு இதனால் கல்லூரி நிர்வாகம் தங்களின் வருகைப் பதிவேட்டில் திருத்தம் செய்து``` ``` வருகை நாட்களை குறைத்து தேர்வெழுத அனுமதிக்கவில்லை எனக்கூறி மாணவிகள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக பல் மருத்துவப் படிப்பை முடிக்க விடாமல் கல்லூரி நிர்வாகம் தடுத்துவிட்டதாகவும் இருவரும் குற்றம்சாட்டினர்.
A" என்று மாறிய "P"
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கல்லூரி நிர்வாகத்திடம் வருகைப் பதிவேட்டை சமர்பிக்க உத்தரவிட்டது. மாணவிகள் கல்லூரிக்கு வந்தால் ```
```'P' (PRESENT) எனவும் கல்லூரிக்கு வராவிட்டால் 'A' (ABSENT) எனவும் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் குறித்து இருந்தனர். அதில் இந்த 2 மாணவிகளுக்கு 'P' என குறிக்கப்பட்டிருந்த பெரும்பாலான நாட்கள் 'A' என மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
மாட்டிக்கொண்ட கல்லூரி நிர்வாகம்
இதன்மூலம் மாணவிகளின் வருகை நாட்களை குறைத்து அவர்களை தேர்வெழுத மாதா பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காததை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிபடுத்தியது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கல்லூரி நிர்வாகம் தரக்குறைவான வேலைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்தார்
மாணவிகளுக்கு கிடைத்த நீதி
கல்லூரி நிர்வாகத்தின் இச்செயலால் 4 ஆண்டுகளை இழந்த மாணவிகள் ராஜ ராஜேஷ்வரி, ரம்ய பிரியா```
``` ஆகிய இருவருக்கும் தலா ரூ.24 லட்சத்தை கல்லூரி நிர்வாகம் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல் மாணவிகள் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவர் என பட்டம் பெறும் வகையில் கல்லூரி நிர்வாகம் படிப்பு நிறைவு சான்றிதழ் (Course completion certificate) வழங்கவும் உத்தரவிட்டார்.
கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை
மாணவிகளின் வருகைப் பதிவேட்டில் மோசடி செய்ததற்காக மாதா பல் மருத்துவக் கல்லூரி எம்.ஜி.ஆர். அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.3 கோடி அபராதத்தை 8 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த கல்லூரி குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு,```
``` மருத்துவக் கல்வி இயக்குநரகம், எம்.ஜி.ஆர். அரசு மருத்துவப் பல்கலைக்கழகம், இந்திய பல் மருத்துவக் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது
அனைத்துக் கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு
இதுபோன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டு முறையை கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இதை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் தனது ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளில் உறுதிபடுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.
No comments:
Post a Comment