தமிழகத்தில் அவ்வப்போது கல்லூரி மாணவர்களின் பாடதிட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வந்தது. தற்போது முழுமையாக 25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் மாறவுள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
பாடத்திட்டங்கள் மாற்றம்:
கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாகவே ஒரே பாடத்திட்டம் தான் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் 80% கல்வியாளர்கள் மற்றும் 20% தொழில்துறை நிபுணர்களை உள்ளடக்கிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வண்ணம் அதற்கு ஏற்றாற்போல பாடத்திட்டங்கள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது.
மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வண்ணமும், தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு தேவையான பட திட்டங்களை அவ்வப்போது பாடத்திட்டத்துடன் புகுத்தி கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் அனைத்தும் மாற்றியமைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாணவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக ஆன்லைன் வகுப்பின் மூலமாகவே பாடம் கற்பித்து வந்தனர்.
தற்போது தான் கொரோனா தொற்று குறைந்து கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனால் இறுதி ஆண்டு மாணவர்களும் வேலைவாய்ப்பினை எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அடுத்த கல்வியாண்டில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் உக்ரைனில் இருந்து தமிழ்நாடு வந்திருக்கும் மாணவர்களும் இங்குள்ள கல்லூரிகளில் சேரும்படியான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment