தமிழ்நாடு பட்ஜெட் 2022-23: இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பிடிஆர்! என்னென்ன எதிர்பார்க்கலாம்? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, March 17, 2022

தமிழ்நாடு பட்ஜெட் 2022-23: இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பிடிஆர்! என்னென்ன எதிர்பார்க்கலாம்?



தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது.கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் கடந்த வருடம் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்ய இருக்கிறார்.கடந்த ஆண்டு பட்ஜெட் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ``` ```இன்று பட்ஜெட் ஜார்ஜ் கோட்டையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த முறையும் பேப்பர் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இதையடுத்து அனைத்து சட்டசபை உறுப்பினர்களின் இருக்கைகளுக்கு முன்பும் கணினி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக வரிகளை உயர்த்தாமல், வரி இழப்புகளை சமாளிக்கும் வகையில் புதிய சீர்திருத்தங்களை அரசு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் வரி இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஜிஎஸ்டிக்குள் அடங்காத துறைகளில் வரி இழப்புகளை சமாளித்து முறைப்படுத்தினால் அது அரசுக்கு வருவாயை ஏற்படுத்தும். இது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.``` ```அதேபோல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை அளிக்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதி ஆகும் இது. திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகையை பெற பெயர் மாற்றம் செய்ய தேவையில்லை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட்டின் போதே அறிவித்து இருந்தார்.இது மின்சார கட்டணத்தில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் கணக்கிடும் முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் இரண்டாவது முழு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக பட்ஜெட் 2022-23 நாளை தாக்கல்.. தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் என்ன?அதோடு திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பல்வேறு வாக்குறுதிகள், ``` ```சமூக நீதி திட்டங்கள், மாணவர்களுக்கான திட்டங்கள், புதிய பூங்கா அமைக்கும் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். அதோடு இன்று மாலை சட்டசபை அலுவல் கூட்டம் கூடி, எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் என்று முடிவு எடுக்கப்படும்

``` ```

No comments:

Post a Comment