தமிழக பட்ஜெட்: மாணவிகளுக்கு ஸ்வீட் நியூஸ்.. பல "சர்ப்ரைஸ்" திட்டங்கள்.. டாப் 20 அறிவிப்புகள் என்ன? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, March 18, 2022

தமிழக பட்ஜெட்: மாணவிகளுக்கு ஸ்வீட் நியூஸ்.. பல "சர்ப்ரைஸ்" திட்டங்கள்.. டாப் 20 அறிவிப்புகள் என்ன?

 ``` ```


பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் பெண்கள் முன்னேற்றம், உயர் கல்வி துறை, மாநகராட்சி முன்னேற்றம், நீர் பாதுகாப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு, சமூக நீதி தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் பிடிஆர் வெளியிட்டார்.``` ```பல்வேறு முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நீதிகள் எவ்வளவு?

 புதிய திட்டங்கள் என்னெவல்லாம் அமலுக்கு வந்துள்ளது?

 தமிழ்நாடு அரசின் டாப் அறிவிப்புகள் என்னென்ன என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழ்நாடு பட்ஜெட் 2022 - 2023ன் முக்கியமான டாப் அறிவிப்புகள் பின்வருமாறு

 1. இன்று இதுவரை வெளியிடப்பட்ட அறிவிப்பில் டாப் அறிவிப்பு என்றால் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம்தான். அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை தரப்படும். மாதாமாதம் வங்கி நேராக இந்த பணம் செலுத்தப்படும். மாணவிகள் உயர் கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிதி அளிக்கப்படும். திருமண உதவித்தொகை திட்டம் கல்வி உதவித் தொகை திட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித்தொகை திட்டம் உயர்கல்வி உதவித்திட்டமாக மாற்றப்பட்டது.``` ``` அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 


2. கல்வித்துறைக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு ரூ.5,568 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறைக்கு ரூ.36,785 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித்திட்டத்திற்கு ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 3. தமிழ்நாட்டில் மருத்துவத் துறைக்கு ரூ.17,901 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு புதிய தலைமை மருத்துவமனைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் புதிய தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்படும். இதற்கு ரூ.1,019 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


 4. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 4281.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இருளர்களுக்கு மொத்தமாக 1443 வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ``` ```தெரிவித்துள்ளார். இதற்கு மொத்தமாக 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி படுகையில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் 3,200 ஆண்டுகள் பழமையானதாகும்.தாமிரபரணி ஆற்றுப் படுகை தொல்பொருட்கள் மூலம், தமிழர் தம் வரலாறு மீண்டும் உறுதியாகியுள்ளது.தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும்.சென்னை வெள்ளம்


5. சென்னையில் வருடா வருடம் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க இந்த முறை முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் வெள்ளத்தை தடுக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 6. சுற்று சூழல் துறைக்கு ரூ.849 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் துறையில், வட்டியில்லா பயிர்கடன் தொடர்ந்து வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல் கால்நடைப் பராமரிப்பு துறைக்கு ரூ.1,315 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் 


7. கோயில்களை போல தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களை பழுது பார்க்கவும் புனரமைப்பதற்காகவும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். கோயில்களை பொறுத்தவரை 1000 ஆண்டுகளுக்கு பழமையான ஆலயங்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இந்து சமய அறநிலையத்துறைக்கு மட்டும் ரூ.340.87 கோடி ஒதுக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார். 


8. மாநகர பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள ரூ.1520 மானியம் அளிக்கப்படும்.கோவை கவனம்


9. கோவையில் கைத்தொழில் மேம்பாட்டு குழுமம் அமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கோவை, வேலூர், பெரம்பலூரில் புதிய தொழில் பூங்காக்கக்கள் அமைக்கப்படும். 


10. தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 5 கோடி ரூபாய் செலவில் 21 மொழிகளில் அச்சிடப்படும். அவரின் கருத்துக்கள் பிற மொழிகளில் புத்தகமாகவும் டிஜிட்டல் வடிவிலும் கொண்டு செல்லப்படும். 


11. ஏற்கனவே உள்ள அணைகளை புனரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 64 பெரிய அணைகளை புனரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதோடு நீர் வள பயன்பாட்டை சரி செய்ய ரூ.3384 கோடி மூலம் பாசன அமைப்பு ஏற்படுத்தப்படும். 


12. சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு``` ``` ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தெரிவித்தார். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.சாலைகள் மேம்பாலம்


13. மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது; 20 கிமீ தொலைவு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். 


14. உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ படிப்பைத் தொடர தேவையான உதவிகளை அரசு வழங்கும். 


15. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், தமிழகத்தின் நிதிநிலை சீராகும்போது செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


 16. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு.நகர்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8737 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு. பிரதமரின் வீடு வசதித்திட்டத்திற்கு ரூ. 3700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.நூறுநாள் வேலை


17 . காஞ்சிபுரத்தில் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, உயர்தர மருத்துவமனையாக மேம்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.25 கோடியில் சமூக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். 


18 . நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஏழை மக்களுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்ட ரூ.``` ``` 2030 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


 19. முதல்வரின் முகவரி மூலம் 10 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 149 சமத்துவபுரங்கள் சீரமைக்க ரூ. 190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.2,542 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


 20 . 500 மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளும் 2213 டீசலில் இயங்கும் பேருந்துகளும் வாங்கப்படும். மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ. 1062 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1949 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சமூக நலத்துறைக்கு ரூ. 5922.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்``` ```

No comments:

Post a Comment