டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - மிஸ் பண்ணிடாதீங்க - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, March 22, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - மிஸ் பண்ணிடாதீங்க

``` ```

 


டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 116 குரூப்-2ஏ பதவிகளில் 5413 என 5529 பணிகளுக்கான தேர்வு வருகிற மே 21ம் தேதி நடைபெறுகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் குரூப்-2 குரூப்-2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அதிகாரிகள்``` ``` மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தம் 5831 காலி பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு, 5255 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21ம் தேதி நடத்தப்படும் என்றும் இதன் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டியே தீருவோம்... கர்நாடகா பிடிவாதம் : தமிழக அரசுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்என்னென்ன பதவிகளுக்கு தேர்வுஇதில் நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கும் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும்.``` ``` நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன. அதே சமயம், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.``` ```மே 21ல் முதல்நிலைத் தேர்வுகுரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு முன்பு ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது. மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் மொழிப்பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.டிஎன்பிஎஸ்சி இணையதளம்குரூப் 2 தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தட்டச்சு முடித்திருக்க வேண்டும். இது தொடர்பான முழு விளக்கங்களை ..``` ``` என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம்.இன்றே கடைசி நாள்குரூப் 2, குரூப் 2 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மே 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதுவரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற தேர்வுகள், இனி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அதன்படி காலை வேலையில் 9.30 முதல் 12.30 வரை தேர்வு நடைபெறும். பிற்பகலில் நடைபெறும் தேர்வுகள் வழக்கம்போல் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.2( டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள்

``` ```

No comments:

Post a Comment