இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்கிய 1,370 கணினிகள்.: அரசு பள்ளிகளுக்கு வழங்கினார் முதல்வர் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, March 30, 2022

இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்கிய 1,370 கணினிகள்.: அரசு பள்ளிகளுக்கு வழங்கினார் முதல்வர்

``` ```

 


இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்கிய 1,370 கணினிகளை 70 அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக 6 பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.இன்ஃபோசிஸ் எனும் தகவல் தொழில்நுட்பம் சார்பில் அரசு பள்ளிகளுக்கு கணினிகள் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி சென்னையில் உள்ள 70 அரசு பள்ளிகளுக்கு 1,370 மேசை கணினிகள் வழங்கப்பட்டன.70 பள்ளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக அவற்றை 6 மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.``` ``` இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 1,370 புத்தாக்கம் செய்யப்பட்ட மேசை கணினிகளை சென்னை பெருநகர மாநகராட்சியின் 70 பள்ளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக, 6 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.03.2022) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு. இ.ஆ.ப., தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மை செயலர் . நீரஜ் மித்தல் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

``` ```

No comments:

Post a Comment