10 மாசமாச்சே.. வெடித்த பிரச்சனை.. முதல்வர் ஸ்டாலினை எதிர்நோக்கும் கண்கள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, March 11, 2022

10 மாசமாச்சே.. வெடித்த பிரச்சனை.. முதல்வர் ஸ்டாலினை எதிர்நோக்கும் கண்கள்



 திமுக பொறுப்பேற்று 10 மாத காலமாகியும், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற குரல்கள் வெடித்து கிளம்பி உள்ளன.. அந்த வகையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக அளிக்கப்பட்டு வந்தது... அரசு ஊழியர் உயிரிழந்த பிறகும்கூட, அவரது மனைவிக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டுதான் வந்தது... ``` ```இதனால் பயன்பெற்றோர் ஏராளம்..இதனிடையே, ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள்! திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் முக்கிய அட்வைஸ்!அரசு ஊழியர்கள்புதிய ஓய்வூதிய திட்டமானது, மாதமாதம் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு அரசு ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர்... புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு,``` ``` மறுபடியும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்கள்.தமிழக அரசுஎனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் கடந்த 2018-ல் வழங்கப்பட்டுவிட்டது.. ஆனாலும், கடைசிவரை அது தொடர்பான அறிவிப்பு வரவேயில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த முறை திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது..ஜவாஹிருல்லாஆனால், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து 10 மாத காலம் ஆகியும், பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிடவிவ்லை.``` ``` இதைதான் தற்போது எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து வருகின்றன.. இதே கோரிக்கையை கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.. மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளார்.. இது தொடர்பாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்:ஆசிரியர்கள்"அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அல்லலுக்காளாக்கிய அதிமுக ஆட்சிக் காலத்தில், 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.``` ``` இதில் ஆறு லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர். பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 19 ஆண்டுகளாக நீண்டு வருகிறது.அரசு ஊழியர்கள்ஊழியர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்து, சூதாட்டத் தன்மைகள் கொண்ட பங்குச்சந்தையில் முதலீடு செய்து, பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் பயன்களுக்குப் பங்கம் விளைவிப்பதாகவே () அமைந்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு முதலிய எந்தப் பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது என்பதால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி போராடி வருகின்றனர்.நடைமுறைகள்மேற்குவங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துள்ளன. கேரள, டெல்லி, ஆந்திர மாநிலங்களின் அரசுகள், வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இலட்சக்கணக்கான கையெழுத்துகளைத் திரட்டியுள்ளனர்.பழைய ஓய்வூதிய திட்டம்அதை 25.03.2022 அன்று தமிழக முதலமைச்சரிடம் வழங்க உள்ளதாகத் தெரிகிறது.``` ``` தமிழக முதலமைச்சர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்த ஜீவாதாரக் கோரிக்கையைப் பரிவோடு பரிசீலித்து, உடனடியாகப் பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட ஆவன செய்து உதவிடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். பங்கம் விளைவிக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.(?)

No comments:

Post a Comment