வரும் 31ம் தேதிக்குள் 'பான் கார்டு'டன், 'ஆதார்' எண்ணை இணைக்காவிட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.கடந்த 2017ம் ஆண்டு பான் கார்டு எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ``` ```ஆதார் எண்ணை இணைக்க, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.
அதைத்தொடர்ந்து பான் - ஆதார் இணைப்புக்கு வழங்கப்பட்ட அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கான அவகாசம் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இனி கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 31ம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment