தமிழக அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிப்பில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 நிதி உதவித்தொகை கிடைக்கும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டசபையில் 2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண``` ``` நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுவதாக அறிவித்தார்.இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் கூறினார். தாலிக்குத் தங்கம் திட்டம் மாற்றம்தாலிக்குத் தங்கம் திட்டம் மாற்றியமைக்கப்படுவதற்கு பல அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தத் திட்டத்தை மாற்றக்கூடாது தொடரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்றைய தினம் இன்னும் சில மாணவிகளுக்கு``` ``` உயர்கல்வி உறுதித் திட்டத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்தமிழ்நாடு சட்டசபை 4வது நாளாக தொடங்கி பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , "தமிழகத்தில் வருமானப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கடன் மளமளவென உயர்ந்துவிட்டது; அதிமுக ஆட்சியில் கடன் அளவு அதிகரித்துவிட்டது.பட்ஜெட் அறிவிப்புநிதிநிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களிலும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இருளர்கள் உள்ளிட்ட பழங்குடியினர் ஆயிரம் வீடுகள் கட்ட ரூபாய் 50 கோடி ``` ```ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் . ஏழைகளுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்ற புகாருக்கு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளிக்கும் உரையில் இவ்வாறு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.1000 நிதி உதவிதமிழக அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிப்பில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 நிதி உதவித்தொகை கிடைக்கும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.ஏழை மாநிலம் அல்லதமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்பதற்கு பல்வேறு புள்ளி விவரங்களை அடுக்கி நிதியமைச்சர் விளக்கமளித்தார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 52 சதவீத இளைஞர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். அரசு வழங்கிய வீடுகளில் வசிப்பவர்கள் வெறும் 14 சதவீதம் பேர்தான் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 66 சதவீதம் குடும்பத்தினர் இருசக்கர வாகனம் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 75 சதவீத குடும்பங்கள் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.சொந்த வீடுநகர்ப்புறங்களில் உள்ள மக்களில் 60 சதவீதம் பேரும், கிராமங்களில் உள்ளவர்களில் 90 சதவீதம் பெரும் சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.``` ``` தமிழ்நாட்டில் 2.06 கோடி குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 2.6 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 50 சதவீத வீடுகளில் குளிர்சாதன பெட்டிகள் உள்ளன. தமிழகத்தில் ஒரே குறை ஒட்டுமொத்த உழைக்கும் வயதில் உள்ளவர்களில் 52 சதவீதம் பேருக்கு தகுதியான வேலை இல்லை என்பது தான் என்று தெரிவித்துள்ளார்..1000. பத்தாம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிப்பில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 நிதி உதவித்தொகை கிடைக்கும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளர்
``` ```
No comments:
Post a Comment