பள்ளி பரிமாற்று திட்டம்
ஆசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவர்கள்
குவி வழி கூட்டம் மூலம் மாணவர்கள் கலந்துரையாடல்
தேவகோட்டை பிப்.:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மற்றும் நாச்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் இடையே பரிமாற்ற நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கொரோனா பரவல் காரணமாக, மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்லாமல், ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு பள்ளி மாறி சென்றார்கள். ஆசிரியர்கள் திட்டத்தின் நோக்கத்தை கூறி பள்ளியின் சிறந்த செயல்பாடுகளை புகைப்படங்கள் மூலமும், காணொளி மூலமாகவும் விளக்கினார்கள். பள்ளியைச் சுற்றியுள்ள வளங்கள் குறித்து விளக்கினார்கள். பொதுமுடக்கத்தின் போது மாணவர்களின் அனுபவங்கள் கேட்கப்பட்டது. இறுதியாக குவிவழிகூட்டம் கூட்டப்பட்டது, இருபள்ளி மாணவர்களையும் பேசச் செய்தனர்.இதில் உதவி தலைமை ஆசிரியை முத்துலெட்சுமி , நாச்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் திருவாத்தாள் , சசிகலா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தாங்களாகவே முன்வந்து நடந்த நிகழ்வுகளை கூச்சம்,பயம் இல்லாமல் பேசியது ஆசிரியர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மற்றும் நாச்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் இடையே பரிமாற்ற நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், உதவி தலைமை ஆசிரியை முத்துலெட்சுமி, நாச்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் திருவாத்தாள் , சசிகலா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment