Breaking : மனமொத்த மாறுதல் Mutual Transfer விண்னைப்பங்களை இன்றே 28.02.22 பெற்று பணியில் சேர நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
2021 2022 ஆம் கல்வியாண்டில்``` ``` ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் EMIS மூலம் பொது மாறுதல் , பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு பணிகள் 21.01.2022 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் தவிர்த்து பிற மாவட்டங்களில் மேற்படி அரசாணையின் வ.எண் . ( 6 ) -ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி , ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை 28.02.2022 முற்பகல் பெற்று , பரிசீலனை செய்து அன்று பிற்பகல் ஒன்றியத்திற்குள் மற்றும் மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் ஆணைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் , மனமொத்த மாறுதல் ஆணை பெற்ற ``` ```ஆசிரியர்கள் அனைவரையும் 28.02.2022 பிற்பகல் விடுவித்து 01.03.2022 அன்று பணியில் சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .
No comments:
Post a Comment