IT 2022 - தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்கள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, February 6, 2022

IT 2022 - தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்கள்


 IT Clarification - 2022

நண்பர்களே வணக்கம் ...... 


ஜனவரி " , பிப்ர " வரி " மாதத்தில் வழக்கமாக பரபரப்பாக இருப்பீர்கள் இந்த ஆண்டு கூடுதல் பரபரப்பு பதவி உயர்வு , மற்றும் பணி மாறுதல் - கலந்தாய்வில் கலந்துக் கொண்டு மாறுதல் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் ...


 24.02.2022 அன்று தான் பணி விடுவிப்பு ? அப்படி எனில் வருமான வரி பிடித்தம் ( Income Tax Deduction ) என்ன செய்வது ? எப்படி செய்வது ? 

இந்த கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கிலேயே இந்த பதிவு . க.செல்வக்குமார் ஆகிய நான் தங்களைப்போல அரசுப்பள்ளி ஆசிரியரே வருமானவரித் துறை நிபுணரோ , பட்டயக் கணக்காயரோ அல்ல . தெரிந்தத் தகவலைப் பதிவு செய்கிறேன் . தெரியாததைக் கற்றுக் கொள்கிறேன் . நன்றி 


1 ) பிப்ரவரி மாத ஊதியம் இப்போது உள்ள பணியிடத்தில் பெறுவத ? அல்லது புதிய இடத்தில் சென்று பெற்றுக் கொள்வதா ? 

தற்போதைய பணியிடத்தில் பெற்றுக் கொள்ளுங்கள் அது தான் சிறந்நது . புதிய பணியிடத்தில் சென்று ஊதியம் பெறுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது . 


2 ) பிப்ரவரி மாத முழு ஊதியத்தையும் ( 28 நாள்கள் ) இங்கேயே பெறுவதா ? அல்லது 24 நாள்கள் ஊதியத்தை மட்டும் இங்கே பெறுவதா ? 


பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டி பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படும் . முழு ஊதியம் ( 28 நாள்கள் )``` இப்போதையப் பணியிடத்திலேயே பெற்றுக்கொள்ளுங்கள் . எனக்குத் தெரிந்தவரை IFHRMS இல் 24 நாள்கள் ஊதியம் மட்டும் எனத் தனியாக ( Partial Pay ) பெற இயலாது . பழைய ATBPS / E - PAYROLL Partial Pay என்ற option இருந்துது . IFHRMS இல் விடுப்பு / absent எனில் மட்டுமே பகுதிச் சம்பளம் தயாரிக்க இயலும் . 


3 ) இப்போதைய பணியிடத்தில் வருமானவரி படிவம் சமர்ப்பிக்கும் போது பிப்ரவரி 24 வரை உள்ள ஊதியத்தை மட்டும் காண்பித்து வரி கணக்கீடு செய்ய வேண்டுமா ? அல்லது பிப்ரவரி 28 வரை முழு ஊதியத்திற்கு கணக்கீடு செய்யவேண்டுமா ? 

முழுமையாக 01.04.2021 முதல் 31.03.2022 வரை ( நமக்கு 28.02.2022 வரை ) உள்ள மொத்த வருமானத்தைக் கணக்கீட்டுத் தற்போதையப் பணியிடத்தில் மொத்த வரித் தொகையை பிப்ரவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்வது தான் சரியாக இருக்கும் . 


4 ) பிப்ரவரி முழுச் சம்பளம் இந்த பணியிடத்தில் பெறுவதால் LPC இல் பிப்ரவரி 28 வரை காண்பித்து - புதிய பணியிடத்தில் மார்ச் மாதத்தில் இருந்து ( ஏப்ரல் 1 ற்கு பிறகு ) சம்பளம் பெற்றுக் கொள்ளலாமா ? 


இல்லை - அது சரியல்ல பிப்ரவரி 25-28 கூடுதலாக பெற்ற நான்கு நாட்கள் சம்பளத்தை ``` `````` ```அரசுக்கணக்கில் செலுத்திட வேண்டும் . புதிய பணியிடத்தில் தான் அந்த நான்கு நாட்கள் ஊதியத்தைப் பெறவேண்டும் . 


5 ) எனக்கு பணி மாறுதல் தான் , புதிய - பழைய பணிடத்தில் ஒரே மாதிரியான கணக்கு தலைப்பு மற்றும் அதே ஊதியம் தான் , அப்படி இருக்கையில் நானும் அந்த நான்கு நாள்கள் ஊதியத்தை திருப்பிச் செலுத்த வேண்டுமா ?

ஆம் - கட்டாயமாக . பணிமாறுதல் பெறும் எல்லோரும் அதற்குரிய தொகையை அரசுக் கணக்கில் செலுத்திட வேண்டும் . அதே தொகையினை புதிய பணிடத்தில் பெற்றுக் கொள்ளலாம் .


 6 ) சரி - நான்கு நாள் ஊதியத்தை திருப்பிச் செலுத்துவது என முடிவாகிவிட்டது , நான் இப்போதைய பணியிடத்தில் பிப்ரவரி 24 பணிவிடுப்பிற்கு முன்னரே கரூவூலத்தில் சென்று அந்த நான்கு நாள்கள் ஊதியத்தைச் செலுத்தி சலானை தலைமை ஆசிரியரிடம் வழங்கி விடலாமா ?


 இதில் அறிந்து கொள்ளவேண்டிய விடயம் இரண்டு உள்ளது . 

1 ) பிப்ரவரி 28 தான் தங்களுக்கு மாத ஊதியம் கணக்கில் வரவு செய்யப்படும் . பணம் பெறுவதற்கு முன்பே அந்த 4 நாள்கள் ஊதியத்தை தற்போது அரசுக் கணக்கில் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை . 

2 ) IFHRMS நடைமுறைக்கு பிறகு கரூவூலத்திற்குச் சென்று சலான் நிரப்பி S.T.O Round Seal அடித்து SBI இல் சென்று மதியம் 2 மணிக்குள் பணம் செலுத்தும் பழைய நடைமுறை ஒழிக்கப்பட்டு விட்டது . தற்போது அனைத்தும் E - Challan payment முறைதான் . கரூவூலம் செல்ல வேண்டிய தேவை இல்லை . 


7 ) பிப்ரவரி 28 க்கு பிறகு தான் பணத்தை திருப்பி செலுத்தும் நிலையில் அந்த தொகையை கணக்கிட்டு - ரொக்கமாக இப்போதைய பள்ளி இளநிலை உதவியாளர் / தலைமை ஆசிரியர் / IFHRMS BILL தயாரிக்கும் ஆசிரியரிடம் வழங்கிவிடவா ? 


தேவையில்லை அவர்களுக்கு எதற்கு சிரமம் . ``` ```நீங்களே உங்கள் வீட்டில் இருந்தே எந்த மாவட்டத்தில் இருந்தாலும் IFHRMS - E - Challan மூலம் தொகையை செலுத்தி விடலாம் . ONLINE mode payment உள்ளது . NET BANKING வசதி இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை . தங்களின் ATM card மூலம் பணம் செலுத்தி விடமுடியும் . பாதுகாப்பானது மற்றும் எளிதானது . 


8 ) online payment எனக்கு அச்சத்தைத் தருகிறது மாற்று வழி ஏதேனும் இருக்கிறதா ? 


IFHRMS - E - Challan online இல் தான் எடுக்க வேண்டும் ஆனால் பணம் செலுத்திட Online / Offline என இரு வழிகள் உள்ளது . E - Challan entry போதே payment method - offline என குறிப்பிட்டால் - இரண்டு நகல் வரும் - வங்கிக்கு சென்று தொகையினை செலுத்தும் போது ஒன்றை அவர்கள் வைத்துக் கொண்டு மற்றொன்றை Bank Seal அடித்து நம்மிடம் வழங்கிவிடுவார்கள் . 


9 ) IFHRMS E - CHALLAN பள்ளி இளநிலை உதவியாளர் அல்லது தலைமை ஆசிரியர் ( Initiator or Approver ) login Id வழியாகத்தான் சென்று பணம் செலுத்த வேண்டுமா ? 


தேவையில்லை ஒவ்வொரு அரசுப் பணியாளர்களுக்கும் IFHRMS employee id உள்ளது . உதாரணமாக பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள் - அலுவலர்களுக்கு 4303 எனத் துவங்கும் 11 இலக்க IFHRMS employee Id உள்ளது . அதன் வழியே உள்ளே சென்று தங்களின் 4 நாள்கள் ஊதியத்தை அரசுக் கணக்கில் நீங்களே செலுத்தலாம் . 


10 ) IFHRMS இல் எப்படி e - challan செலுத்துவது ? 


மன்னிக்கவும் - அது சார்ந்து பல நண்பர்கள் பதிவுகள் மற்றும் you tube videos உள்ளது . பிப்ரவரி வருமான வரிச் சந்தேகங்கள் - கேள்வியும் நானே - பதிலும் நானே - என்ற இந்தப் பதிவு IFHRMS சார்ந்தப் பதிவாக மாறுகிறதோ என்ற நிலையில் நிறுத்திக் கொள்கிறேன் . IFHRMS - சுத்திக்கிட்டே இருக்கு எனப் பலர் வருத்தப்படும் நிலையில் அதை ``` ```கையாளும் ஒருவனாக எனது நிலைப்பாடு - IFHRMS - SUPER - கற்றுக் கொண்டால் நீங்களும் அருமை என கூறுவீர்கள் . 


11 ) புதிய பணியிடத்தில் அந்த 4 நாள்கள் ஊதியம் மார்ச் மாதத்தில் பெறலாமா ? அல்லது நிதியாண்டு நிறைவு காரணமாக 2022 ஏப்ரலில் தான் பெற இயலுமா ?


 வருமானவரி சட்டத்தின் படி நிதியாண்டு என்பது 01.04.2021 முதல் 31.03.2022 வரை எனவே நாம் 31.03.2022 க்கு முன்பே அந்த 4 நாள் ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம் எந்த ஒரு தடையும் இல்லை . 


12 ) புதிய பணிடத்தில் அந்த 4 நாள்கள் ஊதியம் பெற்றிட LPC மட்டும் போதுமா ? I.T Statement மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமா ? 


HRA - CCA - HILL ALLOWANCE மாறாத நிலையில் LPC , E - Challan மட்டும் போதுமானது ஏற்கனவே பிப்ரவரி 28 வரை அனைத்து வருமானத்தையும் கணக்கில் காட்டி வருமானவரி பிடித்தம் செய்து பழைய பணியிடத்தில் செலுத்தி விட்டதால் புதியப் பணியிடத்தில் மீண்டும் வருமானவரிப் படிவம் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை - ஏற்கனவே வருமானவரிப் படிவம் கணக்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது எனச் சான்றிதழ் மட்டும் அளித்தால் போதுமானது .


 13 ) அந்த நான்கு நாள்கள் புதிய பணியிடத்தில் HRA - CCA- HILL ALLOWANCE மாறுகின்ற நிலையில் என்ன செய்வது ?


 பழைய பணியிடத்தில் அதிகம் . புதிய பணியிடத்தில் குறைவு எனில் மீண்டும் Income tax calculation sheet தயாரிக்க வேண்டாம் . தனிநபர் வருமான வரி விவரம் தாக்கல் செய்யும் போது Individual I.T.R -1 ( may - 2022 - july - 2022 ) சமர்பித்து refund பெற்றுக் கொள்ளலாம் சிறிய தொகை தான் . பழைய பணியிடத்தில் குறைவு - புதிய பணியிடத்தில் அதிகம் எனில் மீண்டும் Income tax calculation sheet தயாரித்து கூடுதல் வருமானத்திற்கு ( மிகக் குறைந்த தொகை தான் இருப்பினும் ) வருமானவரியை Income Tax Challan 280/281 மூலம் செலுத்திவிடலாம் . 


வருமானவரிப் பிடித்தம் சார்ந்த சில தகவல்கள் : 


1 ) வீட்டுக் கடன் வட்டி / அசல் கழித்துக் கொள்கிறேன் . இப்போது வீட்டு வாடகை தொகை ( HRA ) உம் சேர்ந்து கழித்துக் கொள்ளலாம் என புது அரசாணை எதுவும் வந்துள்ளதா ? Home Loan and HRA both deduction allowed ?


 புதிய விதி எதுவும் வரவில்லை - ஏற்கனவே உள்ள நடைமுறைதான் ஆனால் உங்கள் சொந்த வீடு வேறு இடத்தில் / ஊரில் உள்ளது . வாடகைக்கு விடவில்லை குடும்ப உறுப்பினர்கள் தான் அதில் தங்கியுள்ளனர் . நீங்கள் வேறு இடத்தில் வாடகை வீட்டில் இருந்தால் இரண்டும் கழித்துக் கொள்ளலாம் தடையேதும் இல்லை . சொந்த வீட்டில் நீங்கள் இருந்து கொண்டு - வாடகை வீட்டில் இருப்பதாக சொல்லி Home Loan and HRA both deduction தார்மீக ரீதியில் சரியாக இருக்காது . 


2 ) HRA - வீட்டு வாடகை இரசீது கட்டாயம் வைக்க வேண்டுமா ? வீட்டு உரிமையாளர் PAN card Xerox பணம் பெற்று வழங்கும் அலுவலரிடம் எல்லோரும் சமர்ப்பிக்க வேண்டுமா ? 


ஆம் -HRA - கழித்தால் வீட்டு வாடகை இரசீது கட்டாயம் வைக்க வேண்டும் . ஆனால் நீங்கள் செலுத்தும் வீட்டு வாடகை ஆண்டிற்கு 1 இலட்சத்திற்கு மேல் எனில் ( மாதம் 8333 க்கு மேல் ) கட்டாயம் வீட்டு உரிமையாளர் PAN card / Adhar card Xerox இணைக்க வேண்டும் . 


3 ) தற்போது வருமானவரி பிடித்தம் முழுப் பொறுப்பு பணம் பெற்று வழங்கும் அலுவலர் அதாவது தலைமை ஆசிரியர் தானே , ``` ```எதுவும் கரூவூலம் செல்லப்போவது இல்லை எனவே யாராவது தெரிந்த நபரின் PAN card Xerox கொடுத்தால் என்ன ? 


இது சரியல்ல - பணம் பெற்று வழங்கும் அலுவலர் / தலைமை ஆசிரியர் ஏப்ரல் 30 க்குள் 24Q எனப்படும் e - filing Q4 ( Fourth quarter e - filing ) சமர்ப்பிக்கும் போது அதில் வாடகை 1 இலட்சத்திற்கு மேல் எனில் House owner PAN / Adhar கேட்கும் அப்படி வழங்கும் போது அந்த நபரின் ( PAN Xerox கொடுத்தவர் ) வருமானத்தில் இந்த வாடகைத் தொகை தானக ஏறிவிட வாய்ப்பு உள்ளது . எனவே PAN Xerox கொடுக்கும் போது கவனம் . 


4 ) Standard Deduction - 50,000 orduBour ( 1545b 2 dorm ? 


ஆம் வருமான வரி பழைய முறை ( Old Regime ) விருப்பம் தெரிவித்துள்ள அனைவருக்கும் Standard Deduction - 50.000 உண்டு . 


5 ) CPS பணியாளர்கள் கூடுதலாக 50,000 கழித்துக் கொள்ளலாமா ? எந்த பிரிவு ?


 உண்மை என்னவெனில் நாம் ( தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் 01.04.2003 க்கு பிறகு ) சந்தா செலுத்தும் CPS என்று அழைக்கப்படும் திட்டம் மத்திய அரசு / ஒன்றிய அரசு வரையறுத்துள்ள NPS திட்டத்தின் கீழ் வராது தமிழகம் இன்றுவரை PFRDA வில் இணையவில்லை . இருப்பினும் மாநில அரசிற்கு தான் நமது சந்தா பிடித்தம் செல்கிறது என்ற அடிப்படையில் நாம் நமது சந்தா தொகையினை 80 C இல் கழித்துக் கொள்கிறோம் . மத்திய அரசு / ஒன்றிய அரசு வரையறுத்துள்ள NPS திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் கூடுதலாக பிரிவு 80CCD ( 1B ) இல் 50,000 வரை கழித்துக் கொள்ளலாம் . நாமும் இதே பிரிவின் கீழ் தான் U / S 80CCD ( 1B ) இல் 50,000 வரை கழித்துக் கொள்கிறோம் . 


6 ) GPF - பணியாளர்கள் இந்த சலுகையினை பெற இயலுமா ? 


ஆம் இயலும் – அவர்கள் செய்ய வேண்டியது ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வங்கியை அணுகி N.P.S - Tler | Account Open செய்து PRAN Number பெற்று ஆண்டிற்கு 50,000 வரை செலுத்தி U / S 80CCD ( 1B ) இல் வருமான வரி சலுகை பெறலாம் . ( 30 % - Tax Slab இல் இருப்பவர்களுக்கு 15,000 + 4 % வரி மிச்சமாகும் )


7 ) 80 C இல் கவனிக்கவேண்டியவை ஏதேனும் இருக்கிறதா ? 

பொதுவாக இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவும் இல்லை . 

அதிகபட்சம் 1,50,000 . 

a ) Post Office R.D - 80 C இல் கிடையாது . 

b ) LIC / MF / ULP -சந்தா தொகை 01.04.2021 முதல் 31.03.2022 செலுத்தியவை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் . சிலர் கடந்த ஆண்டு பிப்ரவரி 2021 வருமானவரி கணக்கு முடித்த பிறகு மார்ச் 2021 இல் சந்தா செலுத்தி இருப்பார்கள் - கடந்த ஆண்டு வருமானவரி கணக்கில் இந்த தொகை நான் காட்டவில்லை இப்போது தான் காட்டுகிறேன் என்றால் அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் வருமானவரி விதிப்படி ஏற்றுக் கொள்ள இயலாது . அதாவது மார்ச் 2021 என்பது கடந்த நிதியாண்டு . 01.04.2021 முதல் தான் இந்த நிதியாண்டு துவங்குகிறது . Home Loan க்கும் இது பொருந்தும் . 

c ) குழந்தைகளின் கல்வி நிலையத்தில் செலுத்தும் மொத்த தொகையினை அப்படியே இப்பிரிவில் காட்டக்கூடாது , அத்தத் தொகையில் Tution Fees எவ்வளவு உள்ளதோ அதை மட்டுமே கழிக்க வேண்டும் . இரசீதில் Tultion Fees என்ற வார்த்தை இல்லை எனில் அதை 80 C இல் காண்பிக்க இயலாது . 


8 ) 80 D , 80 DD , 80 DDB குழப்பமாக உள்ளதே ? இவை 1,50,000 க்குள் அடங்கும் பிரிவா ? 


இல்லை - இவைகள் ( 80 C ) 1,50,000 க்குள் மேல் கழித்துக் கொள்ள இயலும் பிரிவின் கீழ் வருகிறது . மூன்றும் " மருத்துவம் / உடல்நலம் " சார்ந்த செலவுகள் என்பதால் நீங்கள் சற்று குழப்பம் அடையலாம் . ஆனால் மூன்றும் தனித்தன்மை வாய்ந்தவைகள் . 

a ) 80 D Health / Medical Insurance Policy premium payment - deduction நமது NHIS - 2021 திட்டத்தில் செலுத்தும் சந்தா தொகையினை இதில் கழித்துக் கொள்ளலாம் . 

b ) தனியார் - அரசு காப்பீட்டு நிறுவனங்களில் Health / Medical Insurance பாலிசி எடுத்து இருந்தால் ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ 25000 வரை இத்திட்டத்தில் நீங்கள் கழித்துக் கொள்ளலாம் . 

c ) 60 வயதிற்கு குறைவான பெற்றோர்களுக்கு சேர்த்து நீங்கள் பாலிசி எடுத்து இருந்தால் அதிகபட்சம் ரூ 50,000 வரை ``` ```கழித்துக் கொள்ளலாம் . 60 வயதிற்கு மேற்பட்ட பெற்றோர்களுக்கு சேர்த்து நீங்கள் பாலிசி எடுத்து இருந்தால் அதிகபட்சம் ரூ 1,00,000 வரை கழித்துக் கொள்ளலாம் . 


9 ) NHIS2021 இல் பெற்றோர் கிடையாது என்றீர்கள் , இப்போது பெற்றோருக்கும் சேர்த்து பாலிசி என்கிறீர்கள் ? 


ஆம் NHIS2021 இல் பெற்றோர் கிடையாது- ஆனால் தனியார் - அரசு காப்பீட்டு நிறுவனங்களில் Health / Medical Insurance பாலிசி எடுக்கும் போது பெற்றோரையும் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் அதற்குத் தகுந்தவாறு பிரிமீயம் அதிகமாக இருக்கும் . 


10 ) 80DD ? 

தங்களின் குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவிற்காக ஆண்டிற்கு ரூ 75,0000 ( 40 -80 சதவீத ஊனம் எனில் ) ரூ 1,25,000 ( 80 சதவீதத்திற்கு மேற்பட்ட ஊனம் எனில் ) இந்த பிரிவின் கீழ் கழித்துக் கொள்ளலாம் . Fixed Amount - Disability certificate required from prescribed medical authority . 


11 ) 80 U பிரிவும் இது தானே ? 


இல்லை - அந்த பணியாளரே மாற்றுத்திறனாளி எனில் 80 U பிரிவு . பணியாளர் குடும்ப உறுப்பினர் மாற்றுத்திறனாளி எனில் 8ODD பிரிவு - தொகை இரண்டிற்கும் ஒன்று தான் . உடல் ஊனத்தின் அடிப்படையில் தொகை மாறுபடுகிறது . 40 சதவீதற்கு கீழ் உடல் ஊனம் எனில் சலுகை கோரமுடியாது . 


(12 ) அப்ப 8ODDB என்ன ? 


பணியாளர் அல்லது அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவினை இந்த பிரிவின் கீழ் கழித்துக் கொள்ளலாம் . அதிக பட்சம் ரூ 40,000 குடும்ப உறுப்பினர் 60 வயதிற்கு மேற்பட்டவர் எனில் அதிகபட்சம் ரூ 1,00,000 வரை கழித்துக் கொள்ளலாம் . 


13 ) இந்த பெருந்தொற்று காலத்தில் பலர் கொரோணா சிகிச்சைக்கு இலட்சக் கணக்கில் செலவு செய்துள்ளார்கள் அப்படி எனில் அந்த செலவுத் தொகையை 80DDB இல் கழித்துக் கொள்ளலாமா ?


 மன்னிக்கவும் - இயலாது ஏனெனில் எல்லா மருத்துவ செலவுகளுக்கும் இந்த திட்டத்தில் அனுமதி இல்லை 

.com/img/a/

14 ) 80 D Vs 80 DDB ? 


80 D 80DDB - வருமுன் காக்க செய்யும் செலவு - வந்த பின் காக்க செய்யும் செலவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டு ) . 


15 ) 80G - எல்லா நன்கொடை தொகையையும் அனுமதிக்கலாமா ?


 தேசிய நிதி - பிரதமர் பாதுகாப்பு நிதி - தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதி போன்ற மத்திய / ஒன்றிய / மாநில அரசுகளுக்கு செலுத்தப்படும் நிதியினை 100 % முழுமையாக கழித்துக் கொள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர் அனுமதிக்கலாம் தடையேதுவும் இல்லை . தனியார் அறக்கட்டளை / தொண்டு நிறுவனங்கள் / சமயம் சார்ந்த அமைப்புகளுக்கு செலுத்தும் நன்கொடையினை பொறுத்தவரையில் ??????????


கொரோணாவிற்கு முந்தைய காலத்தில் 3-4 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்ட தலைநகரில் ஒரு பெண்கள் கல்லூரியில் வைத்து மதுரை மண்டல வருமானவரித்துறை இணை ஆணையர் தலைமையில் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான TDS / TCS சாந்த விளக்க கூட்டம் நடைபெற்றது அதில் அவர்கள் கூறிய கருத்தை தங்களுக்கு பதிவு செய்கிறேன் . DDO'S 80 G Government Contribution எனில் allow செய்யுங்கள் . Other than Govt Contribution like Trust Donation எனில் உங்கள் நிலையில் அதை அனுமதிக்க கூடாது . எனில் எல்லோருக்கும் 100 சதவீத கழிவு கிடையாது . % மாறுபடும் அதே போல் அந்த நிறுவனம் வருமானவரித்துறையில் நன்கொடை பெற அனுமதி பெற்றுள்ளதா ? என்ற விவரம் உங்களுக்கு தெரியாது ? வருமானவரித்துறையும் நிரந்தர அனுமதி வழங்குவது கிடையாது .``` ``` நன்கொடை வசூல் செய்ய அனுமதியை புதுப்பித்துள்ளார்களா ? என்ற விவரங்களை நீங்கள் உங்கள் நிலையில் சரிபார்க்க இயலாது . எனவே அப்படி தொண்டு நிறுவனங்களுக்கு செலுத்திய நன்கொடைக்குரிய வருமான வரிச்சலுகையினை அந்த தனிநபர் Income Tax Retum -1 e - filling செய்யும் போது காண்பித்து refund பெற்றுக் கொள்ளலாம் . எனது தனிப்பட்ட கருத்து - Government Donation - 80 G - No Issues - HM / DDO can allow Trust Donation 80 G பொறுத்தவரையில் தனிநபர் individual e - filing I.T.R தாக்கல் செய்யும் போது Refund பெற்றுக் கொள்ளட்டும். பணம் பெற்று வழங்கும் அலுவலர் நிலையில் அதை அனுமதிப்பது சரியாக இருக்குமா என தெரியவில்லை . நான் பதிவு செய்துள்ள கருத்துக்கள் - எனக்குத் தெரிந்த அளித்துள்ளேன் . தவறுகள் / திருத்தங்கள் தேவை எனில் பகிரலாம் -திருத்திக் கொள்வோம் . 


``` ```IT Clarification - 2022 ( pdf) - Download here...

நன்றி :

 திரு க.செல்வக்குமார் 

முதுகலை வேதியியல் ஆசிரியர் 

நகராட்சி ’ மேல்நிலைப் பள்ளி மேலக்காந்திநகர் சாத்துார் -626203 

விருதுநகர் மாவட்டம் .

 Selva7pc@gmail.com - 


No comments:

Post a Comment