யார் யாருக்கு கொரோனா பரிசோதனை?: திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை..!!
யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 85,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,310 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி,
* சளி, காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறி உள்ளோர் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும்.
* 60 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை உள்ளோர் பரிசோதனை செய்ய வேண்டும்.
* அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கும் தொற்று அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும்.
* வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வணிக வளாகங்கள் மார்க்கெட் பகுதிகள் மற்றும் பேருந்து, ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்களிடம், ரேன்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர் எனவும் சொல்லப்பட்டுள்ளது. முன்னதாக, கொரோனா பரிசோதனை தொடர்பாக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா அறிகுறி உள்ள நபர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து இணை நோயுடன் போராடுகிறவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
வெளிநாடு செல்கிற தனி நபர்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோர் அனைவரும் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள்படி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை. மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்வோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
No comments:
Post a Comment