மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: அசிஸ்டென்ட் மினரல் எகனாமிஸ்ட் - 14
பணி: ஸ்டோர்ஸ் ஆபிசர் - 11
``` ```பணி: உதவி பேராசிரியர் (வரலாறு) - 01
பணி: உதவி பேராசிரியர் (ஆயுர்வேதம்) - 07
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 03.03.2022 தேதியின்படி ஸ்டோர்ஸ் ஆபிசர் பணிக்கு 30க்குள்ளும், அசிஸ்டென்ட் மினரல் எகனாமிஸ்ட் பணிக்கு 35க்குள்ளும், உதவி பேராசிரியர் (வரலாறு) பணிக்கு 35க்குள்ளும், மற்ற பணிகளுக்கு 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு ``` ```மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்
No comments:
Post a Comment