ஜிப்மரில் நர்சிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, February 23, 2022

ஜிப்மரில் நர்சிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை

ஜிப்மரில் நர்சிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை

ஜிப்மரில் நர்சிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை ஜிப்மரில் நர்சிங் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்மர் கல்லூரி நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பி.எஸ்சி. நர்சிங் புதுவை ஜிப்மர் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் 94 இடங்களும், பி.எஸ்சி., அலைடு ஹெல்த் சயின்ஸ் பிரிவில் (மயக்கவியல், ஆய்வகம், இதய ஆய்வகம் உள்ளிட்ட 11 பாடப்பிரிவுகள்) 87 இடங்கள் என 181 இடங்களுக்காக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் உள்ள 94 இடங்களில் 9 இடங்கள் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 85 இடங்கள் பெண்களுக்கானவை. மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. மார்ச் 14-ந்தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம். ஜிப்மர் இணையதளத்தில்... தகுதியான விண்ணப்பதாரர்கள் குறித்த விவரங்கள் ஜிப்மர் இணையதளத்தில் (www.jipmer.edu.in) மார்ச் 21-ந்தேதிக்குள் வெளியிடப்படும். கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment