வேலையில்லா பட்டதாரிகளுக்கு குறுகிய கால இலவச பயிற்சி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 15, 2022

வேலையில்லா பட்டதாரிகளுக்கு குறுகிய கால இலவச பயிற்சி


வேலையில்லா பட்டதாரிகளுக்கு குறுகிய கால இலவச பயிற்சி

தமிழக அரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் இணைந்து, வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சிகளாக ஜி.எஸ்.டி. கணக்குகள் நிர்வாக உதவியாளர் (3 வாரம்), அக்கவுண்ட்ஸ் கணக்குகள் நிர்வாகி பயிற்சிகள் (5 வாரம்) அளிக்க உள்ளன.

இந்த பயிற்சிகள், சென்னை அம்பத்தூர் மகாகவி பாரதியார் நகர் சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் பயிற்சி வளாகத்தில் அடுத்த வாரம் முதல் தொடங்கப்பட உள்ளன. இந்த குறுகிய கால பயிற்சி முற்றிலும் இலவசம். மேலும் இந்த இரண்டு இலவச பயிற்சிகளை திறம்பட முடித்தவர்களுக்கு தமிழக அரசின் சான்றிதழ் வழங்குவதுடன், அவர்கள் தகுந்த பணியில் சேருவதற்கும் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான உதவிகளையும் பயிற்சி மையங்கள் மூலமாக இலவசமாக உதவி செய்து வருவதுடன், பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவையும் தமிழக அரசு வழங்குகிறது.



குறைந்த இடங்களே உள்ள இந்த குறுகியகால இலவச பயிற்சிகளில் இளங்கலை பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வேலையில்லாமல் இருக்கும் ஆண், பெண் என இருபாலரும் சேர்ந்து இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பயிற்சியில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப முன்பதிவு அறிமுக மற்றும் தொடர் வகுப்புகள் தொடர்பான விவரங்களுக்கு 9869041169 என்ற எண்ணில் அல்லது mangalyantwcs@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவல் மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment