வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு
சிவந்தி அகாடமி சார்பில் வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது சிவந்தி அகாடமி சார்பில் வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. வங்கி தேர்வு இந்திய ரிசர்வ் வங்கி நடத்தும் கிளார்க் தேர்வு மற்றும் ஐ.பி.பி.எஸ். நடத்தும் வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் ஆகிய தேர்வுகளுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்துகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு கழக தேர்வுக்கான பயிற்சிகளும் சேர்த்து வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் ஐ.பி.பி.எஸ். தேர்வை எழுதலாம். பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ரிசர்வ் வங்கி கிளார்க் தேர்வை எழுதலாம்.
இதில் பொதுப்பிரிவினர் 28 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 31 வயது வரையிலும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையிலும் தேர்வை எழுதலாம். ரிசர்வ் வங்கி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 8-ந்தேதி ஆகும். ஆன்லைன் பயிற்சி வகுப்பு எழுத்து தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் இந்த வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி சார்பில் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 23-ந்தேதி வரை மொத்தம் 40 நாட்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.
பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கிறது. பயிற்சியின்போது 20 மாதிரி தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இந்த பயிற்சியில் சேருபவர்களுக்கு வங்கி தேர்வுகளில் இடம் பெறும் காமன் சென்ஸ் ரிசனிங், பஸில், நியூமெரிக்கல் எபிலிட்டி, குவான்டிடேட்டிவ் ஆப்ட்டியூடு, இங்கிலீஸ் லாங்குவேஜ், ஸ்ட்டாடிக் ஜி.கே. மற்றும் டேட்டா இன்டர்பிரட்டேசன் ஆகிய தலைப்புகளில் 7 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புத்தகங்கள் சிவந்தி அகாடமியின் சார்பில் பயிற்சி பெறுபவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பயிற்சி கட்டணம் வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க வல்லுனர்களால் ஆன்லைனில் நடத்தப்படும்.
இந்த பயிற்சி வகுப்பில் சேர கட்டணம் ரூ.5,500 ஆகும். இதில் சேர விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 4-ந்தேதி ஆகும். பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் புகைப்படம் ஒட்டி, பெயர் பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு எழுதி அத்துடன் ரூ.5,500-க்கான டிமாண்ட் டிராப்ட் (கனரா வங்கி அல்லது ஐ.ஓ.பி.-ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அல்லது இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்- 628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பயிற்சிக்கான கட்டணம் எந்த காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639 242998, 9488228404, 7092942644, 9361294426 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment