முழு நேரமும் பள்ளிகள் செயல்பட வேண்டும்: கல்வித்துறை உத்தரவு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, February 6, 2022

முழு நேரமும் பள்ளிகள் செயல்பட வேண்டும்: கல்வித்துறை உத்தரவு.

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் காலை, பிற்பகல் என முழு நேரமும் செயல்பட வேண்டும். அனைத்துப் பாடவேளைகளிலும் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளிகள் காலை, பிற்பகல் என இரு வேளைகளிலும் செயல்பட வேண்டும். வழக்கத்தில் உள்ள ``` ```அனைத்துப் பாட வேளைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டும். மாணவா்களை முழு அளவில் நேரடியாகப் பள்ளிக்கு வரவைத்து பாடம் நடத்த வேண்டும். அரை நாள் மட்டும் பள்ளிகளை நடத்துவதும், ஓரிரு மணி நேரத்தில் மாணவா்களை வீட்டுக்கு அனுப்புவதும் நடக்கக் கூடாது; நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பாடங்களையும் மிகுந்த கவனத்துடன் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment