உலகத்தாய்மொழி தினம் - சிறப்பு வினாடி வினா (மின்சான்றிதழுடன்) - ULAKA THAIMOZHI THINAM SPECIAL QUIZ WITH E-CERTIFICATE
உலக தாய்மொழி தினம்
”என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தாய்மொழியின் தொன்மை பற்றி பாரதியார் கூறியுள்ளார்.
உலகில் பல ஆயிரகணக்கான மொழிகள் உள்ளன. அவற்றில் பழமையான மொழிகளுள் எமது தாய்மொழியாகிய தமிழ் மொழியும் ஒன்று.
நமது தாய்க்கும் நமக்கும் எவ்வாறு நெருங்கிய பந்தம் உள்ளதோ அது போல தமிழ் மொழிக்கும் நமக்கும் அழகிய பந்தம் உள்ளது.
தன்னுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டதே மொழி ஆகும். வாய்மொழியே முதலில் தோன்றியது அதன் பின்பு தான் எழுத்து மொழி தோன்றியது.
எமது தாய்மொழி தொன்மை காலம் முதலே நாகரீகம் நிறைந்த பேச்சு மொழியையும் எழுத்து இலக்கணங்களையும் இலக்கிய மரபுகளையும் கொண்டு காணப்படுகிறது. உள்ளத்து எண்ணங்களை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துவது எமது தாய்மொழியாகும்.
தாய்மொழி
ஒருவன் பிறந்தது முதலாக மனதில் உள்ளவற்றை சிந்திப்பதற்கும் அதனை பேசுவதற்கும்``` ``` எழுதுவதற்கும் அடிப்படையாக இருப்பதே தாய்மொழி என்று சொல்லப்படுகின்றது. இதுவே அந்த மனிதனுக்கு ஓர் அடையாளத்தை வழங்குகின்றது.
உலகத்திலே எத்தனையோ மொழிகள் காணப்பட்டாலும் அவர் அவருக்கு தன்னுடைய தாய்மொழி மிகவும் உயர்வானது. தனது தாய்மொழியில் கற்பதும் தாய்மொழியில் பேசுவதும் அவர்களுக்கு சிறந்த உணர்வை எப்போதும் தரும்.
உலகத்தாய்மொழி தினமாகிய இன்று உலக முதன்மொழியாம் செம்மொழி தமிழைப்பற்றிய சிறப்புக்காணொளியும்,அதைச்சார்ந்த சிறப்பு வினாடி வினாவும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
சிறப்புக் காணொளி👇👇
No comments:
Post a Comment