அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதியலாம்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தேசிய தரவு தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தேசிய தரவுதளத்தில் பதிவு செய்யப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கட்டுமானம், கல்குவாரி, தச்சுவேலை, வீட்டுப்பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், நுாறு நாள் வேலை திட்டப்பணியாளர்கள் உட்பட 156 தொழில்களில்``` ``` இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் செய்யப்படாதவர்கள் 'eSHRAM' என்ற போர்ட்டலில் பொது சேவை மையங்களில் பதிவு செய்யப்படுகிறது.
பதிவு செய்ய 1 வயது முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். எந்த கட்டணமும் தேவையில்லை. பதிவு செய்ய ஆதார் அட்டை, வங்கி கணக்குப்புத்தகம், ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசியில் ஓ.டி.பி., அல்லது கைரேகை மூலம் பதிவு செய்யலாம். பதிவேற்றம் செய்த பின் தொழிலாளர்களுக்கு 12 இலக்க எண் கொண்ட யுனிவர்சல் எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும்.
தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காக புலம் பெயர நேர்ந்தால் அரசிடம் இருந்து பெற வேண்டிய சலுகைகளைப்பெற இந்த அட்டை உதவியாக இருக்கும்.இதில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் பிரதமரின் காப்பீட்டு``` ``` திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை தேசிய தரவு தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment