அரசு பள்ளிகளில் புத்தகம் இல்லா தினம் கொண்டாட உத்தரவு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, February 9, 2022

அரசு பள்ளிகளில் புத்தகம் இல்லா தினம் கொண்டாட உத்தரவு.


.com/img/a/

2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய திட்ட ஏற்பளிப்புக் குழு கூட்ட நடவடிக்கை ஒப்புதலின் படி , அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புத்தகமில்லா தினம் என்ற செயல்பாட்டினை நடத்த அனுமதித்து , அதற்காக மாணவர் ஒருவருக்கு ரூபாய் 10 / - வீதம் 1263550 மாணவர்களுக்கு மொத்தம் ரூ .126.355 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இச்செயல்பாட்டின் முக்கிய நோக்கம் :


 இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்குவதும் , ``` ```மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்துவதும் ஆகும் . மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை முழு சுதந்திரத்துடன் வெளிப்படுத்தவும் , மன அழுத்தமில்லாத சூழ்நிலையில் அனுபவங்களின் மூலம் கற்றுக் கொள்வதற்கும் , உடல் , மனம் மற்றும் அறிவுசார் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமையும் . அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகங்களை எடுத்துச் செல்லும் சுமையை குறைத்து , வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்களின் மூலம் மாணவர்கள் பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை ``` ```பள்ளிகளில் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

 பாரம்பரிய கலைகளை பற்றிய அறிவினை மாணவர்களிடையே புகுத்துவதன் மூலம் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை இன்னும் பல நூற்றாண்டுகள் பாதுகாக்க முடியும் . மேலும் விவசாயம் சார்ந்த அறிவுடன் , மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும் , மாடித் தோட்டங்களின் தேவைகளையும் மாணவர்கள் அறிய செய்தல் இன்றைய காலத்தின் அவசியமாக உள்ளது.

No comments:

Post a Comment