வாட்ஸ் ஆப் குழு பதிவுகளுக்கு அட்மின் பொறுப்பல்ல: ஐகோர்ட்
'வாட்ஸ் ஆப் குழுவில், உறுப்பினர்கள் வெளியிடும் பதிவுகளுக்கு, குழுவை உருவாக்கிய 'அட்மின்'கள் பொறுப்பல்ல' என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி ``` ```விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொச்சியைச் சேர்ந்த ஒரு நபர், வாட்ஸ் ஆப்பில், நண்பர்கள் என்ற பெயரில் குழு கணக்கை துவங்கி உள்ளார்.அந்தக் குழுவில் மேலும் இருவரை சேர்த்து அவர்களை, அட்மின்களாக நியமித்தார். அவர்களில் ஒருவர், அந்த குழுவில் குழந்தை ஆபாச 'வீடியோ'க்களை பகிர்ந்து உள்ளார்.
இது, சட்டவிரோதமான செயல் என்பதால், போலீசார், இது தொடர்பாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வீடியோக்களை பகிர்ந்தவர், முதல் குற்றவாளியாகவும், குழுவை உருவாக்கிய நபர், இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, குழுவை உருவாக்கியவர், கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'குழந்தை ஆபாச வீடியோக்களை நான் பதிவிடவில்லை; எனக்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை' என கூறினார்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:வாட்ஸ் ஆப்பில் குழு கணக்கை உருவாக்கிய மனுதாரர், குழந்தை ஆபாச வீடியோக்களை வெளியிடவில்லை ```இதில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை.
வாட்ஸ் ஆப் குழுவில் உறுப்பினர்கள் வெளியிடும் பதிவுகளுக்கு, குழுவை உருவாக்கியவர்கள் பொறுப்பல்ல. எனவே, அவர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment