அரசு ஊழியர்கள் சில முக்கிய அறிவிப்புகளுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருப்பு
மத்திய அரசு ஊழியர்கள் சில முக்கிய அறிவிப்புகளுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக, அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவைத் தொகை, வீட்டு வாடகைப் படி உயர்வு, அடிப்படை சம்பள உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளுக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், மார்ச் மாதம் வரும் ஹோலி பண்டிகைக்கு முன்பாக சம்பள உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை சம்பளம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.```
``` இதற்காக fitment factorஐ 2.57இல் இருந்து 3.68ஆக உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அகவிலைப்படி நிலுவைத் தொகை
அரசு ஊழியர்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை அகவிலைப்படி நிலுவைத் தொகை செலுத்தப்பட வேண்டியிருக்கிறது. இதுபற்றிய அறிவிப்புக்காகவும் ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
அகவிலைப்படி உயர்வு
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூன் மாதங்களில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் கடந்துவிட்ட நிலையில் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
வீட்டு வாடகைப் படி
அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து வீட்டு வாடகைப் படித் தொகையும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment