ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9494 பணியிடங்களை நிரப்ப TRB முடிவு
கொரோனா குறைந்ததைத் தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை தமிழக அரசு அறிவித்தது வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு கால திட்ட அட்டவணையை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறையில் உள்ள 9494 பணியிடங்களை நிரப்ப உள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும். இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் போட்டித் தேர்வு நடைபெறும். அதைப்போல் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 167 விரிவுரையாளர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1334 உதவி பேராசிரியர் பணியில் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள 104 உதவி பேராசிரியர் பணிகளுக்கு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment