இனி டிகிரி படிப்பது ரொம்ப ஈஸி...900 தன்னாட்சி கல்லூரிகளில் ஆன்லைன் பட்டப்படிப்புக்கு யுஜிசி அனுமதி
பல்கலைக்கழகங்களில் மட்டும் ஆன்லைன் வழி பட்டப்படிப்புகளில் சேரலாம் என்கிற நடைமுறையை மாற்றி 900 கல்லூரிகளில் நாடு முழுவதும் புதிய நடைமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்துள்ளது. ஆன்-லைன் வழியில் பட்டப் படிப்புகளில் சேரும் புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி அமல்படுத்த உள்ளது.நேரடியாக கல்லூரி சென்று பட்டப்படிப்பு முடிக்கும் மாணவருக்கு சமமாக ஆன்-லைன் வழியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் கருதப்படுவார்கள்.கொரோனா பரவல் காரணமாக கடந்த மூன்று ஆண்டு காலமாகவே பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் ஆன்லைன் மூலமே நடைபெற்று வருகிறது.``` ``` தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் விரைவில் நாடு முழுவதும் 900 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஆன்-லைன் வழியில் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.புதிய கல்விக்கொள்கைபுதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2035ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த புதிய நடைமுறை நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.கல்வித்தகுதிஅந்தவகையில் ஆன்லைன் வழி இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் முதுகலை படிப்புகளில் சேர இளங்கலை படிப்புகளில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.ஆன்லைன் படிப்புகள்ஆன்-லைன் வழி பட்டப்படிப்புகளை துவங்குவதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் முன் அனுமதியை பெற அவசியம் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது எனினும் ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரிகள்எனப்படும் தர மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.``` ```கொரோனாவால் மாறும் கல்விச்சூழல்கொரோனாவால் கல்விச்சூழலே மாறி விட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு தினசரியும் பேருந்தில் பயணம் செய்து போய் படித்த காலம் போய் இனி பட்டப்படிப்பை கூட ஆன்லைன் மூலம் படித்து முடிக்கும் காலம் வந்து விட்டது. நேரடியாக படிப்பவர்களைப் போலவே ஆன்லைன் மூலம் படிப்பவர்களும் கருதப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டில் இருந்தே நமக்கு பிடித்தமான கல்லூரியில் ஆன்லைன் மூலம் இளங்களை, முதுகலைப் பட்டப்படிப்புகளைப் படிக்கலாம்.விதிமுறைகளில் திருத்தம்தற்போதுள்ள திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் திட்டங்கள் மற்றும் ஆன்லைன் திட்டங்கள் விதிமுறைகள், 2020 இல் திருத்தத்திற்கான வரைவு இறுதி செய்யப்பட்டு வருகிறது, மேலும் இந்த வாரம் கல்லூரி நிறுவனங்களிடம் இருந்து கருத்துகளைப் பெற முடியும். இந்த புதிய கட்டமைப்பு மூலம் தன்னாட்சி கல்லூரிகள் உட்பட உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புகளை படிக்கலாம்
No comments:
Post a Comment