71 ஐடிஐ.களில் புதிய தொழில் நுட்பப் பாடப் பிரிவுகள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, February 10, 2022

71 ஐடிஐ.களில் புதிய தொழில் நுட்பப் பாடப் பிரிவுகள்



71 ஐடிஐ.களில் புதிய தொழில் நுட்பப் பாடப் பிரிவுகள்

தமிழகத்தில் 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) புதிய பாடப் பிரிவுகளுக்கான பணிகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தொடங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது. தமிழகத்தில் 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் ``` ```செயல்பட்டு வருகின்றன. அவற்றில் தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ற படிப்புகளை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மின்சார வாகனங்கள் பழுது நீக்குதல் உள்ளிட்ட ஐந்து புதிய பாடங்களுக்கு அனுமதி தரப்பட்டது. இந்த அனுமதியைத் தொடா்ந்து, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை தமிழக அரசு கோரியுள்ளது. ஐந்து புதிய பாடப் பிரிவுகளிலும் நேரடியாக அனுபவமுள்ள திறமையான நபா்கள் மாணவா்களுக்கு பயிற்சிகளை அளிக்க உள்ளனா். ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு புதிய பாடங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment