ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 2 காலிப் பணியிடங்கள்
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 2 காலிப் பணியிடங்கள்
மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கும் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு வருகிற 28-ஆம் தேதிக்குள் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் திட்ட அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் AAP-2021 - 2022ஆம் ஆண்டின் செயல் திட்டத்தின் கீழ், மாநில வள பயிற்றுநா் (STATE RESOURCE PERSON – SRP FARM ACTIVITIES), மாநில வள பயிற்றுநா் (STATE RESOURCE PERSON – SRP NON FARM ACTIVITIES) ஆகியவற்றில் தலா ஒரு தற்காலிகப் பணியிடம் மதிப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
நிகழ் நிதியாண்டில் பண்ணை சார்ந்த தொழில்கள், பண்ணை சாரா தொழில் திட்டங்களை மேல்மலையனூா், கண்டமங்கலம், மைலம், ஒலக்கூா், செஞ்சி, வானூா், மரக்காணம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் செயல்படுத்த ஏதுவாக, இந்தத் திட்டத்தில் இந்த இரண்டு பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.
மாநில வள பயிற்றுநா் (பண்ணை சார்ந்த பணிகள்) பணிக்கு விவசாயம், கால்நடை மருத்துவம், தோட்டக்கலை படிப்பில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
மாநில வள பயிற்றுநா் (பண்ணை சாரா பணிகள்) பணியிடத்துக்கு ஊரக வளா்ச்சி, சமூகசேவை அல்லது வணிக மேலாண்மை படிப்புகளில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். இரு பணியிடங்களுக்கும் குறைந்தபட்சம் 2 முதல் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சித் துறை கட்டடம், மாவட்ட பதிவாளா் அலுவலகம் எதிரில், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரியிலும், 04146 - 223736, 9444094479 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment