வினாத்தாள் கசிவு: வினாத்தாள்கள் வெளியாகி இருந்தாலும் அட்டவணையில் மாற்றம் இல்லை; 2 பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, February 14, 2022

வினாத்தாள் கசிவு: வினாத்தாள்கள் வெளியாகி இருந்தாலும் அட்டவணையில் மாற்றம் இல்லை; 2 பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை

 வினாத்தாள் கசிவு: வினாத்தாள்கள் வெளியாகி இருந்தாலும் அட்டவணையில் மாற்றம் இல்லை; 2 பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை

 வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். நாளை நடைபெற உள்ள 10ம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் பிப்.17 ஆம் தேதி நடைபெறும் ஆங்கிலப் பாட வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகியுள்ளது. பிளஸ்2 கணிதத் தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானது. வினாத்தாள் கசிவு குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் வினாத்தாள் வெளியாகியுள்ளது. வினாத்தாள்கள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வி ஆணையம் கூறியுள்ளது.


 திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள்கள் வெளியானதையடுத்து தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்கட்ட விசாரணையில் வந்தவாசி அருகே செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி மூலம் வினாத்தாள் வெளியாகி உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார்.

No comments:

Post a Comment