இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜனவரி பருவ சேர்க்கை நீட்டிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 22, 2022

இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜனவரி பருவ சேர்க்கை நீட்டிப்பு

 

இக்னோ பல்கலைக்கழகத்தில்  பருவ சேர்க்கை  நீட்டிப்பு

இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜனவரி பருவ சேர்க்கை பிப்.28 வரை நீட்டிப்பு

சென்னை: இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜன.2022 பருவ மாணவர் சேர்க்கை பிப்.28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை,``` ``` டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.



மா்ணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஜனவரி 2022 பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி பிப்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
.இக்னோவில் குறிப்பிட்ட சில இளங்கலை படிப்புகள்,``` ``` டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. மா்ணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment